Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

உலகின் மிகவும் சிறிய நாடுகள்

யாரவது உங்களிடம் மதுரையை விட சிறிய நாடு உலகில் உள்ளது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் உண்மையாகவே உலகில் பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருக்கும் நகரங்களைவிட சிறியவை ஆகும். வாருங்கள் இன்று உலகின் மிகச்சிறிய நகரங்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்.

வெட்டிக்கன் நகரம்

ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் வெட்டிக்கன் நகரம் உலகிலேயே மிகச்சிறிய நாடாகும். வெறும் 44 ஹெக்டர் பரப்பளவில் இருக்கும் இந்த நகரத்தில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை சுமார் 800 ஆகும். மிகக்குறைந்த மக்கள் தொகை இருந்தும் இந்த நாட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டில் இவர்களது நாணயங்கள், தபால்கள் மற்றும் ரேடியோ நிலையங்கள் போன்ற அனைத்தும் உள்ளது. மேலும் ரோமன் கேத்ரிக் ஆலயம் இங்கு இருப்பதினால் இந்த நகரம் உலக பிரசித்திபெற்ற நகரம் ஆகும்.

Vatican City (Pic: vaticancity)

மொனாக்கோ

வெட்டிக்கன் நகரத்திற்கு பிறகு உலகின் இரண்டாவது சிறிய நாடு மொனாக்கோ ஆகும். இந்த நகரம் பிரான்ஸ் மற்றும் இத்தாலி இரண்டுக்கும் நடுவே கடலோரத்தில் அமைந்துள்ளது. 2.02 கிலோமீட்டர் பரப்பளவில் இந்த நகரம் உள்ளது. இங்கு இருக்கும் மக்கள் தொகையின் எண்ணிக்கை 37831 ஆகும். இங்கு இருக்கும் மான்டே கார்லோ சந்தை மிகவும் பிரபலமான சந்தை ஆகும். இங்கு பிரஞ்சு மொழி பேசப்படுகிறது. கடலோரத்தில் இந்த நாடு இருப்பதினால் சுற்றுசூழல் மிகவும் அற்புதமாக உள்ளது. மேலும் மற்ற நாடுகளின் ஒப்பிடும்போது இங்கு இருக்கும் கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

நவ்ரூ

பசிபிக் பெருங்கடலில் இருக்கும் ஒரு தீவு நாடுதான் இந்த நவ்ரூ. நவ்ரூவின் மொத்தப் பரப்பளவு 21.3 கிலோமீட்டர் ஆகும். மேலும் உலகின் மிகச்சிறிய சுதந்திர குடியரசு நாடு என்கிற பெருமை இந்த நாட்டுக்கு உள்ளது.உலகிலேயே தலைநகரம் இல்லாத ஒரே நாடு நவ்ரூ நாடுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டுக்கு என்றுஎந்தவொரு ராணுவப்படையும் இல்லை. இந்த நாட்டின் மக்கள் தொகை 10,000 என்பது குறிப்பிடத்தக்கது.

சான் மரினோ

சான் மரினோ ஐரோப்பிய கண்டத்தின் மிகவும் பழமையான நகரம் என கருதப்படுகிறது. உலகின் ஐந்தாவது மிகச்சிறிய நாடாகும். இந்த நாட்டின் ஆட்சி மொழி இத்தாலியன் ஆகும். இந்த நாட்டின் பிரபலமான நகரம் சரரவலே(Sararawale) ஆகும். 61கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இந்த நகரத்தின் மக்கள் தொகை 31,448 ஆகும்

San Marino (Pic: Wikipedia)

துவாலு

உலகின் நான்காவது மிகச்சிறிய நாடாகும். இந்த நாடும் பெருங்கடலுக்கு நடுவே அமைந்துள்ளது. இந்த நாடு பிரிட்டிஷ் பிடியில் இருந்தது. 1978 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. 26 கிலோமீட்டர துவாலு நாடு பரவியுள்ளது. இந்த நாட்டில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை சுமார் 12,373 ஆகும். மேலும் உலகில் குறைந்த மக்கள் வாழும் நாடுகளில் துவாலு மூன்றாவது இடத்தில் உள்ளது.

லீக்டன்ஸ்டைன்

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லீக்டன்ஸ்டைன் உலகின் ஆறாவது மிகச்சிறிய நாடாகும். இந்த நாட்டின் வளம் சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடப்படுகின்றது. 160.4 கிலோமீட்டர் பரப்பளவில் பரவி இருக்கும் இந்த நாட்டில் 36925 மக்கள் வசிக்கின்றனர். இந்த நாட்டின் தலைநகரம் வந்தூஸ் ஆகும். மேலும் இங்கு பிரபலமான நகரம் சச்சன் ஆகும். இங்கு பேசப்படும் மொழி ஜெர்மன் ஆகும். மேலும் இந்த நாட்டு மக்களின் சிறப்பம்சம் அரசாங்க வரி மீது மிகவும் நேர்மையாக இருப்பார்கள். இதனால் தான் இந்த நாடு இவ்வளவு வளமாக உள்ளது.

Liechtenstein City (Pic: pixabay)

மார்ஷல் தீவு

அட்லாண்டிக் கடலோரத்தில் அமைந்திருக்கும் இந்த மார்ஷல் தீவ உலகின் மிகச்சிறிய நாடுகளில் எழாவது இடத்தில் உள்ளது. இந்த நாட்டின் பாதுகாத்து வருவது அமேரிக்கா ஆகும். இதற்கான காரணம் தெரியவில்லை. மேலும் இந்த நாட்டின் பரப்பளவு  181 கிலோமீட்டர் ஆகும். இங்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 52634 ஆகும்.

மாலத்தீவு

இந்த நாடு இந்த பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும் உலகளவில் மிகவும் பிரபலமான நாடு என்பது குறிப்பிடத்தக்கது இந்திய பெருங்கடலில் அமைந்து இருப்பதினால் இந்த நாட்டை இந்திய கடலின் முத்து என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள். இந்த நாட்டின் மக்கள் தொகை மற்றும் பரப்பளவு வைத்து பார்த்தால் ஆசிய கண்டத்தில் மிகவும் சிறிய நாடு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டின் தலைநகரம் மாலே ஆகும். மாலத்தீவின் பரப்பளவு 298 கிலோமீட்டர் ஆகும். 345,023 மக்கள் தொகை ஆகும்.

Maldives-Island (Pic: maldivesholidayoffers)

மால்ட்டா

உலகின் பத்தாவது சிறிய நாடுதான் மால்ட்டா.  ஐரோப்பிய நாடுகளில் ஒரு நாடாகும். இந்த நாட்டின் மக்கள் தொகை 423,282 ஆகும். மற்ற சிறிய நாடுகளைவிட இந்த எண்ணிக்கை அதிகமாகும். இந்த நாட்டின் பரப்பளவு 316 கிலோமீட்டர் ஆகும். மால்ட்டை மொழி இங்கு பேசப்படுகிறது.

கிரெனடா

கரீபியன் கடல் பகுதியில் உள்ளது இந்த  கிரெனடா நாடு. உலகின் 11வது சிறிய நாடாகும்.  ஆறு சிறிய தீவுகளை கொண்ட நாடாகும். சென்ட் ஜார்ஜ் கிரெனடாவின் தலைநகரம் ஆகும். இந்த நாட்டின் பரப்பளவு 344 கிலோமீட்டர் ஆகும் மற்றும் இங்கு வசிக்கும் மக்கள் எண்ணிக்கை 110,000 ஆகும். ஆங்கிலம் இங்கு பேசப்படும் மொழியாகும்.

Grenada City (Pic: migrateworld)

செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்

கிழக்கு கரீபியன் கடல் பகுதியில் அமைந்திருக்கும் இந்த நாடாகும். இங்கு முதல் முதலில் வசித்தவர்கள் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.    இந்த நாட்டின் பரப்பளவு 261 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது மேலும் இங்கு வசிக்கும் மக்களின் மக்கள் தொகை 54191 ஆகும். இந்த நாட்டிலும் ஆங்கிலம்தான் ஆட்சி மொழியாக உள்ளது

செயிண்ட். வின்சென்ட் மற்றும் கிரெனேடின்ஸ்

வாட கரீபியனில் அமைந்திருக்கும் இந்த நாடு உலகின் 12வது சிறிய நகரம் ஆகும். இந்த நாட்டின் பரப்பளவு 344 கிலோமீட்டர் ஆகும். இந்த நாட்டின் மக்கள் தொகை 103,000 ஆகும். கிங்ஸ்டவுன் இந்த நாட்டின் தலைநகரம் ஆகும். ஆங்கிலம் இங்கு முக்கய மொழி ஆகும்.

Saint Vincent and the Grenadines (Pic: sailandco)

பார்படோஸ்

பசிபிக் பெருங்கடலின் கரீபியன் தீவில் அமைந்துள்ளது இந்த பார்படோஸ் நகரம் ஆகும். இந்த நாட்டில் பெரும்பாலான அடிமைகள் குடியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மக்கள் குடியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது. 430 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இந்த நகரத்தில் 279,000 மக்கள் வசிக்கின்றனர். இந்த நாட்டின் தேசிய மொழி ஆங்கிலம் ஆகும். இந்தியர்கள் குடியேறியதால் இந்திய மொழிகளும் இங்கு பேசப்படுகிறது.

ஆன்டிகுவா மற்றும் பார்புடா

ஆன்டிகுவா மற்றும் பார்புடா சிறிய நாடாக இருந்தாலும் சர்வதேச அளவில் இதற்கென தனி மதிப்பு உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் தொகை 81,799 ஆகும் இங்கு பேசப்படும் மொழி ஆங்கிலம் ஆகும்

செஷல்ஸ்

உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றுதான் செஷ்ல்ஸ். இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் செஷ்ல்ஸ் குடியரசு நாடக பார்க்கின்றனர். இந்த நாட்டின் தலைநகரம் விக்டோரியா ஆகும். இங்கு ஆட்சி மொழி ஆங்கிலம் ஆகும்.451 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இந்த நாட்டில் 80699 வசிக்கின்றனர்

Seychelles (Pic: Telegraph)

இந்த ஆக்கம் பிடித்திருந்தால் அல்லது தகவலில் தவறு இருந்தால் உங்களது கருத்தை கீழே நிச்சயம் பதிவு செய்யவும்  மேலும் பல சுவாரசியமான தகவலுடன் சந்திப்போம்

Feature Image Credit: vaticancity.com

 

Related Articles