Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

அதிக பாதுகாப்பு நிறைந்த அமெரிக்காவின் ரகசியங்கள் காக்கப்படும் Area 51.

உலகில் வளர்ச்சியடைந்த எல்லா நாடுகளுக்குள்ளும் இன்னமும் வெளிவரப்படாத ரகசியங்களும் மர்மங்களும் புதைந்துகிடப்பது என்பது உண்மைதான். அந்த வகையில் உலக நாடுகளுக்கெல்லாம் தலைவன் என்ற சிம்மாசனத்திலுள்ள அமெரிக்காவானது, பலவருட காலமாக தன் நாட்டு பாதுகாப்பு துறைக்குக் கூட தெரியாத பல மர்ம இடங்களைக் தன்னுள் கொண்டுள்ளது. அதில் பிரதான ஒன்று தான் இந்நாட்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் Area 51. 

இந்த Area 51 என்பது அமேரிக்காவில் நெவாடா என்ற மாகாணத்திலுள்ள ஓர் விமான தளம் என்று சொல்லப்படுகின்றது. இந்த விமான தளமானது சுமார் 10KM நீளமும் 16KM அகலமும் கொண்ட பிரம்மாண்ட இடமாகும். சுற்றிலும் மலைகள் மற்றும் பாலைவனங்களை கொண்டுள்ள இந்த Area 51 ஆனது, இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்தே ஒரு ராணுவ தளமாகவும் செயல்பட்டு வருவதாகவும் அமெரிக்க அரசினால் கூறப்படுகின்றது.

அப்படி என்ன தாங்க இருக்கு?

பலவருட காலமாக இதனுள் இருக்கும் ரகசியத்தை அறிந்துத் கொள்ளத் துடிக்கும் பலரும், பலவிதமான கருத்துக்களையும் வதந்திகளையும் சொல்லிவருகின்றனர். அவ்வாறு, இரண்டாம் உலக யுத்த காலத்தில் இருந்து இங்கு அதிபயங்கரமான வெடிக்குண்டுகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர் என சிலராலும், வானிலையை கட்டுப்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பங்கள் தயார்செய்யும் இடமெனவும், அமெரிக்காவுக்கென்றே தனித்துவமான வானூர்திகள் உருவாக்கப்படும் இடமெனவும் மற்றும் Area 51 என்ற பெயர் சொன்னவுடன் இங்கு வேற்றுகிரக வாசிகளின் (aliens)  உடல்களும் அவர்களின் தொழிநுட்பங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் தான் நடைபெறுகின்றன எனவும் பெரும்பாலானோரால் நம்பப்பட்டு வருகின்றது. இப்பகுதியில் வாழும் மக்கள் இங்கு விசித்திர விண்கலங்கள் தரை இறங்குவதாகவும், இதுவரை பார்த்திடாத  புது வகை போர் விமானங்களும், தரைவழி ஊர்திகளும் அங்கு சென்றுவருவதாகவும் கூறிவருகின்றனர்.

வேற்றுகிரகவாசி என இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வந்த புகைப்படம்

ஆனால், இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ள  கூற்றுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்தவித ஆதாரங்களும் இதுவரை காட்டப்படவில்லை என்பதே நிதர்சனம்.

எல்லை பாதுகாப்பு 

பார்ப்பதற்கு ராணுவப்படையின் ஆயுதங்கள் மற்றும் வானூர்திகளை சோதனையிடும் இடமாகத் தெரியும் இந்த Area 51ன் எல்லைக்கு 7 கிலோமீட்டர்களுக்கு முன்பே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நிறுத்தப்படுகின்றார்கள். எந்த வித வாகனங்களும் குறிப்பிட்ட எல்லையை மீறிச் செல்ல முடியாது. இப்பகுதிக்குள் கேமராக்கள், செல்போன் மற்றும் எந்த வித தொழில்நுட்பமும் செயல்படுவதில்லை.

Underground motion detection sensor கள் பொறுத்தப்பட்டுள்ள  Area 51  பகுதி

இதன் சுற்றுவட்டார எல்லை முழுவதும் Underground motion detection sensor கள் பொறுத்தப்பட்டுள்ளதால் அத்துமீறி உள்ளே நுழைவோரை கேள்விகள் இன்றி கைது செய்யவும், அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவும் அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

பாதுகாப்புப் படையினர்

இப்பகுதியினை பாதுகாக்கும் படையினர் ”Camo Dudes” என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அந்நாட்டு இராணுவமோ, காவல்துறை சேர்ந்தவர்களோ அல்ல. இவர்களைப் பற்றி கூட இன்றளவும் தகவல்கள் தர மறுத்து வருகிறது அமெரிக்க அரசு. 

Area 51 பகுதியின் Camo Dudes என்று அழைக்கப்படும் எல்லை பாதுகாப்பு படையினர்.

இவ்வளவு பாதுகாப்பு நிறைந்த இந்த Area 51 ல் அப்படி என்ன தான் நடக்கிறது என்பது இதைப்பற்றி அறிந்த உலக மக்களின் கேள்வியாகவே உள்ளது.

அனுமதிக்கப்படுவோர்

ஐக்கிய அமெரிக்காவின் CIA எனப்படும் Central Intelligence Agency எனும் உளவு நிறுவனமும் இப்பகுதியில் தொழில்புரிய தெரிவுசெய்யப்பட்ட தனித்துவமான ஆட்களைத் தவிர வேறு ஒருவராலும் இந்த Area 51 பகுதியினுள் கால்வைப்பதென்பது என்பது கற்பனைக்குக் கூட எட்டாத காரியமாகும்.  உலக நாடுகளிலுள்ள ஒவ்வொரு அரசு துறையும் தான் செலவுசெய்யும் பணத்தினை அரசுக்கு பற்றுச்சீட்டுடன் அனுப்பப்பட வேண்டியதென்பது அவசியமான ஒன்றாகும். அனால் இந்த Area 51 பகுதிக்காக அனுப்பப்படும் பணத்திற்கு எந்த வித கணக்கு காட்டப்பட வேண்டிய அவசியம் என்பதேயில்லை.

அமெரிக்காவின் CIA எனப்படும் Central Intelligence Agency உளவுத்துறை

ஒவ்வொரு வருடமும் அமெரிக்க அரசானது இந்த Area 51 ற்கு கணக்கிலிடப்படாத பல மில்லியன் டொலர்கள் அனுப்பிவருவது அந்நாட்டு பத்திரிக்கைகள் மற்றும் செய்திகள் மூலம் உலகிற்கு தெரியவந்தது.  

அனுமதி வழங்கப்பட்ட விமானம்

அமெரிக்க சாம்ராஜ்யத்தின் ராணுவ விமானங்கள் கூட பார்க்கமுடியாத இப்பகுதியில், ஜேனெட் எனப்படும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட விமானங்கள் மட்டுமே இப்பகுதிக்கு சென்றுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்படும் இந்த விமானத்தில் Area 51 இல் தொழில்புரிவோர்கள் மட்டுமே பயணிக்கமுடியும்.

Area 51 இல் தொழில்புரிவோர்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட சிவப்பு நிற கோடுகள் போடப்பட்ட ஜெனெட் விமானங்கள்.

காலை,மாலை என இரு நேரங்களில் மட்டும் பயணிக்கும் இந்த ஜேனெட் விமானமானது Area 51 இல் தொழில்புரிவோர்களுக்கென மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட விமான சேவை என்பது சுவாரஸ்யமான தகவலாகும்.

முகநூலில் ஆரம்பிக்கப்பட்ட  ‘Storm Area 51, They Can’t Stop All of Us’ நிகழ்வு

சில நாட்களுக்கு முன்னர் முகநூல் பயனர் ஒருவர் தன் முகநூல் பக்கத்தில், ‘Storm Area 51, They Can’t Stop All of Us’ என்ற பெயரில் நிகழ்வொன்றினை (Event) பகிர்ந்துள்ளார். இதில், இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் அனைவரும் வருகின்ற செப்டம்பர் 20 ஆம் திகதி அதிகாலை 3 மணி அளவில் அதிபாதுகாப்பு நிறைந்த Area 51 பகுதிக்குள் செல்வோம் என்றும் அங்குள்ள பாதுகாப்பு படையினரால் நம்மில் சிலரை மட்டுமே கொல்லவோ அல்லது கைது செய்யவோ முடியும் என்றும் இறுதியில் மிஞ்சும் எவராயினும் இப்பகுதியினுள் சென்று அங்குள்ள ரகசியத்தை உலகிற்கு வெளியிடுவோம் என விளையாட்டுத்தனமாக பகிரப்பட்டது. அனால் விளையாட்டாகப் பகிரப்பட்டதை பலரும் ஆர்வமாக தீவிரமாக எடுத்துக்கொண்டதன் விளைவாக 2 மில்லியன் மக்கள் இதற்கு லைக் செய்தும் 1.5 மில்லியன்  மக்கள் இந்நிகழ்வில் பங்கேற்கப்போவதாகவும் பதிலளித்தனர். 

முகநூலில் விளையாட்டுத்தனமாக ஆரம்பிக்கப்பட்ட ”Storm Area 51, They Can’t Stop All of Us” எனும் நிகழ்வு

அதிகம் பகிரப்பட்டு சமூகவலைதளங்களில் பேசப்பட்டுவந்த இச்செயற்பாட்டினால், அமெரிக்காவின் நெவாடா நகர் பகுதியிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள், சுற்றுலா பயணிகளுக்கான தங்குமிட விடுதிகள் மற்றும் குறிப்பிட்ட திகதியில் அப்பகுதிக்கான விமான பயணச்சீட்டு போன்றவை அதிகமாக முற்பதிவு செய்யப்பட்டுவந்துள்ளது. இச்செய்தியானது அமெரிக்க பாதுகாப்புத் துறையினரின் காதுகளின் விழ, அவர்கள் அமெரிக்க மற்றும் அங்குள்ள மக்களின் பாதுகாப்புக்கருதி, அப்பகுதிக்கு எவரும் செல்லவேண்டாம் எனவும் மீறிச்செல்பவர்கள் மீது எந்தவித கேள்வியுமின்றி துப்பாக்கி பிரயோகம் செய்ய தங்களுக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் அனைவருக்கும் கடும் எச்சரிக்கை விடுத்திருகின்றனர். இந்த எச்சரிக்கையின் பின் அங்கு செல்வதை அவர்கள் தவிர்க்கவேண்டும் என பலரும் கூறிவந்தாலும், வருகின்ற செப்டெம்பர் 20 ஆம் திகதி அப்பகுதியில் நடக்கப்போகும் சம்பவத்திற்க்காக சிலர் ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.

விமானதளமாக காட்சியளிக்கப்படும் Area 51 பகுதி

பல ஆண்டுகளாக உலகின் அதிபாதுகாப்பு நிறைந்த இடங்களில் ஒன்றான இந்த Area 51 இனை பற்றி ஆயிரம் கருத்துக்கள், வதந்திகள்,  கட்டுக்கதைகளைக் சொல்லப்பட்டு வந்தாலும் இதற்குள் இருக்கும் ரகசியத்தினை அமெரிக்க அரசே ஆதாரத்துடன் உலகிற்கு சொன்னால் தான் இதற்கு முற்றுப்புள்ளி. அதுவரைக்கும் இதைப் பற்றிய எந்தவித தகவல்களுமே கேள்விக்குறி மட்டுமே தான். 

Related Articles