தேர்தல் விஞ்ஞாபன பரப்புரைகள் : சில சிறப்பான அம்சங்கள்

ஜனரஞ்சக அரசியலுக்கும் புத்தி சாதூர்யத்திற்கும் பரந்த தொடர்புண்டு: ஏனெனில் தங்களின் வாக்கு வங்கிகளை பெருக்கிடும் நோக்கிலேயே, போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களை, திறமை மற்றும் ஆளுமை மிக்க தலைவர்களாக அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடிய அனைத்து உத்திகளையும் மேற்கொள்வார்கள். “கண்ணில் படாதது கருத்தில் அமையாது” என்பார்கள். ஆகவே, (இப்போது எதிர்நோக்கியிருப்பதைப் போன்றொரு) தேர்தலின் போது, தமது பரப்புரைகளை காட்சிப்படுத்தல் மூலம் இலகுவாக இன்நோக்கத்தினை அடைந்துவிடலாம்..  அவர்களின் கருத்துக்களையும் வாக்குறுதிகளையும் முடிந்தவரை மக்களின் மத்தியில் கொண்டுசெல்ல வேட்பாளர்கள் அவர்களுக்கு சாத்தியமான ஒவ்வொரு வழியையும் பயன்படுத்துவதொன்றும் வழக்கத்திற்கு மாறான விடயமொன்றல்ல.

இந்தத் தேர்தல் அமளிதுமளிகளுக்கிடையில், வேட்பாளர்களின் திறன்களை மதிப்பிடுவதற்கான மிக முக்கியமான வழிகளில் ஒன்று பெரும்பாலும் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை – அதாவது வேட்பாளரொருவரின் தேர்தல் அறிக்கை அல்லது தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த பார்வை. இதுவே வேட்பாளருக்கும் மக்களுக்கும் இடையிலான ஒப்பந்தமாகும். ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலமே வேட்பாளரொருவர்  எதிர்காலத்திற்கான அவரது பார்வையை விரிவுபடுத்துவதோடு, அவர் வெற்றிபெற எதிர்பார்க்கும்; மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றுவதற்கான அவரது வாக்குறுதிகளையும் வழங்குகிறார். எவ்வித முன்யோசனையுமின்றி இந்தத் தேர்தலை நோக்கி நாம் பயணம் செய்யும் அவசரகதியில் வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கையின் பக்கங்களில் ஒழிந்துள்ள அவர்களது வாக்குறுதிகளை படிக்க, நாம் எளிதாக மறந்துவிடுகின்றோம். 

எங்கள் வாசகர்களுக்காக இவ்விடயங்களை எளிதாக்கும் நோக்குடன், விரைவான ஒப்பீட்டுக்காக மிக விரிவான தேர்தல் கொள்கை அறிக்கைகளைக் கொண்ட ஐந்து வேட்பாளர்களை நாங்கள் உங்களுக்காக  தேர்ந்த்தெடுத்துள்ளோம். முக்கியமான விடயம் என்னவென்றால், எந்தவொரு வேட்பாளரையும் பரிந்துரை செய்யவோ அல்லது வலியுறுத்தவோ நாங்கள் இங்கே முற்படவில்லை. ஆனால் இத் தேர்தலில் களமிறங்கியிருக்கும் குறிப்பிட்ட சில போட்டியாளர்கள் அவர்களது தேர்தல் அறிக்கைகளில்; தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், ஊழல், அரசியலமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்தங்கள், மகளிர் மற்றும் LGBTQIA+ இன் உரிமைகள் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து என்ன சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பதனை மட்டுமே அறியமுற்படுகிறோம். 

ஒவ்வொரு அறிக்கையின் உள்ளடக்கங்களையும் முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்துவது சாத்தியமற்றதாகும்,  எனவே இப்போது நடைமுறையில் உள்ள முக்கிய சிக்கல்களை பிரதிநிதித்துவப்படுத்திடும் கொள்கைகளையும் வாக்குறுதிகளையும் பற்றி மட்டும், எம்மால் முடிந்தவரை சுருக்கமாகத் தந்துள்ளோம். மேலும் வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு  நாங்கள் இந்த சுருக்கத்தில் முக்கியமான பிரச்சினைகள் என்று நீங்கள் கருதும் ஏதாவதொன்றை தவறவிட்டிருப்பதாக தோன்றினால், அதற்காக நாங்கள் மனம் வருந்துகிறோம். தேர்தலுக்கு முன்னர், ஆழ்ந்த புரிதலையும், தெளிந்த சிந்தனையையும் பெற்று சிறந்த தெரிவொன்றை செய்திட இவர்களது தேர்தல் அறிக்கைகளை ஆழமாகப் படிக்குமாறு  நாங்கள் உங்களை கேட்டுநிற்கிறோம்.

படத்தை அழுத்துவன் மூலம் அதை பெரிதாக்கிக் காணலாம்.

பட வடிவமைபப்பு—Jamie Alphonsus

Related Articles