Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளும் சுயாதீன விடுதி உரிமையாளர்களும்

இலங்காபுரி தீவின் சூபீட்சம் இப்போது குறைந்துபோயுள்ளது.

2019-20 நிதியாண்டில் இலங்கையின் சுற்றுலாத்துறையானது இரு பெரும் இடர்பாடுகளைச் சந்தித்தது. முதலாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வடிவில் வந்தது. அதிலிருந்து மெதுவாக மீண்டெழும்போதே COVID-19 தொற்றுப்பரவலும் வந்து சேர்ந்தது. சுற்றுலாத்துறையின் முக்கிய காலகட்டமான கடந்த சில மாதங்கள் விமான போக்குவரத்திற்காக முடக்கப்பட்டதாலும் இலங்கையில் விதிக்கப்பட்ட பூரண ஊரடங்கு காரணமாகவும் ஏனைய துறைகளுடன் சுற்றுலாத்துறையும் அபாய நிலையை அடைந்தது.

மே 11இலிருந்து நாடு படிப்படியாக பரவலான சுகாதார அறிவுறுத்தல்களுடன் திறந்து விடப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுலாவுக்கான வாய்ப்புக்கள் மிகுதியுள்ள ஆண்டில் வழக்கமானதாக இருக்காது போகலாம். இவ்வேளையில் இத்துறையின் முதன்மையான அமைப்புகளும் அவற்றுடன் நேரடியாக தொடர்புடைய ஏனைய நிறுவன அமைப்புகளும் மீளும் வழியை கண்டறிந்து அதனை அடைவதில் தமது பலத்தை செலுத்தும்போது பெரும்பாலான சுயாதீன விடுதி உரிமையாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது..

அவர்களது நேரம், முயற்சி, பணம் என அனைத்தையும் அவர்களது உடமைகளை கட்டியெழுப்ப முதலிட்டுள்ள நிலையில், இனி கிடைப்பது கிடைக்கட்டும் என எழுமாற்றாக தூண்டில் வீசிப்பார்பது சரியான தெரிவாக அமையாது. அதற்கு பதிலாக பெரும்பாலான சுயாதீன விடுதி உரிமையாளர்கள் தம்மிடமுள்ள பணத்தை சேமிக்கும் அதேவேளை தமது விருந்தினர்களுக்கு தம்மால் இயன்ற சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கான பல்வேறு வழிகளை எதிர்நோக்கியுள்ளனர்.

கடற்கரைகள் மற்றும் பிற தளங்களில் சுற்றுலாப் பயணிகளை நம்பியுள்ள சுயதொழில் புரிபவர்கள் பலர், இத் தொற்றுநோய் பரவலால் உதவியற்ற நிலையில் உள்ளனர். பட உதவி: mysrilankanholidays.com

கட்டணங்கள் குறைக்கப்படுகிறது 

மாத்தறையின் கடலோர நகரான திக்வெல்ல பகுதியில் சாதாரணமாக சுற்றுலா பயணிகள் வந்துகுவியும் விடுதி அது. கடற்கரையோரமமைந்த அழகிய சிறு அளவிலான அந்த விடுதி, இப்போது வெறிச்சோடிப்போய் உள்ளது. அருகிலுள்ள, நீர்ச்சறுக்கு(surf) பிரியர்களுக்கு பிடித்த நகரான ஹிரிகெடிய குடாவில் திரளும் கூட்டத்திற்கு, நெடிதுயர்ந்த தென்னைமரங்களால் சூழப்பட்ட இந்த விடுதியின் சாந்தமான சூழல் சிறப்பான மாற்றுமருந்தாகும். இப்போது விருந்தினர்களின் வருகை இல்லையெனினும் Soul Resortsன் இயக்குனரான மொஹமட் அடமலி தனது வேலையில் மிகவும் பரபரப்பாயிருக்கிறார்.

இந்த செயலறு காலத்தில் அவர் விடுதியில் பல்வேறு திருத்த வேலைகளை முன்னெடுத்துள்ளார். அத்துடன் தனது வலைத்தளம், சேவைகள் மற்றும் பாதுகாப்பு முன்னெடுப்புகள் ஆகியவற்றையும் மறுசீரமைத்துள்ளார். அவரது விடுதி ஆயுர்வேத சிகிச்சை, யோகா, ஆரோக்கிய சிகிச்சைகள் ஆகியவற்றையும் வழங்குகிறது. மீண்டுமொருமுறை சுற்றுலாத்துறை இயங்க ஆரம்பித்ததும் இவ்வாறான சேவைகள் விருந்தினர்களை அதிகளவில் ஈர்க்கும் என நம்புகிறார். “அவ்வப்போது ஆரோக்கியம் தேடி பயணிக்கும் சுற்றுலாப்பயணிகளை தவிர்த்து இவ்வாண்டின் பெரும்பகுதி மந்தமாக இருக்கும் என உணர்கிறோம். ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆயுர்வேத சிகிச்சைக்கென முன்பதிவு தொடங்கும் எனவும் அத்துடன் டிசம்பர் பருவம் என்பன சேர்ந்து சென்ற ஆண்டு வருவாயின் 50% ஏனும் எட்டமுடியும் என நம்புகிறோம்” என அவர் கூறினார். அடமலி தனது விடுதியை சந்தைப்படுத்துவதில் கவனம் செலுத்துதல் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கான அறைகளின் கட்டணங்களை குறைத்தல் குறித்து திட்டமிடுகிறார்.

கடுமையான சுகாதார நடைமுறைகளைச் செயல்படுத்த வழிவகையற்ற சிறு கடை உரிமையாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வரத்தொடங்கினாலும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளனர். பட உதவி: synotrip.com

குடும்பத்திற்கே முன்னுரிமை

செலவை குறைக்கும் முன்னெடுப்புகள் மற்றும் பணி நீக்கங்கள் ஆகியன நகரின் முக்கியமான பேசுபொருளாக இருந்தவேளை, கண்டியின் ஹன்தான் மலைகளிலுள்ள ஒரு சிறு விடுதியின் உரிமையாளர் தனது பணியாட்களுக்கு முன்னுரிமை அளித்தார். “இந்த விடுதி எங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது. இந்த அசாதாரண சூழ்நிலையின் போது எங்கள் பணியாட்களின் ஆரோக்கியமும் பாதுகாப்புமே எங்கள் முதல் இலக்கு”, என Theva Residencyன் முகாமைத்துவ இயக்குனரான தீஷனா அமரசேகர Roar Mediaவிற்கு தெரிவித்தார். “ஆகையால் நாம் விடுதியை முழுவதுமாக மூடி அவர்களை அவர்களது குடும்பத்தாருடன் இருக்க வாய்ப்பளித்தோம்” எனவும் அவர் கூறினார்.

Theva Residencyயை சேர்ந்த யாருமே ஊரடங்கு நேரத்தில் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்பதுடன் அவர்களுக்கு முழுமையான சம்பளமும் வழங்கப்பட்டது. அமரசேகர தனது குழுவிற்கு மாதாமாதம் குறைந்தளவான சேவை கட்டணத்தையும் வழங்க தீர்மானித்திருந்தார். “இந்த நெருக்கடியான நிலை அவர்களது பொருளாதார நிலையை பெரிதளவில் பாதித்துவிட்டதாக அவர்கள் உணரக்கூடாது என நாம் நினைத்தோம்” என அவர் கூறினார்.

கண்டி மாவட்டத்தில் ஊரடங்கானது தளர்த்தப்பட்டதும் பணியாட்கள் அனைவரும் விடுதியை மீளத்திறப்பதற்கான முன்னாயத்தங்களில் ஈடுபட்டனர். அமரசேகர அவரது குழு எவ்வாறு மீள்சுழற்சி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு ஒரு தொகுதி மூலிகை மற்றும் காய்கறிகளை தயார் செய்தனர் என்பதை Roar Mediaவிற்கு தெரிவித்தார். இதன் அறுவடையானது விடுதிக்கு பயன்படும்.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் மற்றும் உள்ளூர் சுகாதார ஆணையாளர்கள் வழங்கிய சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய செயற்பட்டு அனுமதி கிடைத்தவுடன் தமது விருந்தினர்களை வரவேற்க Theva Residency இப்போது தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.

“ இந்த நெருக்கடி எமது தொழிலில் தாக்கத்தை ஏற்பட்டுத்தியுள்ளது. மேலும்  சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையுடன் மேலும் சமநிலையை பேணும் வகையில் திட்டங்களை மாற்றியமைக்கவும் வலியுறுத்தியுல்ளது. நாம் மேலும் முழுமையான மருத்துவ குணம் கொண்ட உணவுகளை தயார் செய்வதில் கவனம் செலுத்துகிறோம். அத்துடன் எமது எதிர்கால விருந்தினரின் உணர்வுகள் மற்றும் மனநிலையை நன்கு பேணுவதிலும் அக்கறை கொண்டுள்ளோம்” என அமரசேகர கூறினார். அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே, அவரது தொலைபேசி ஒலித்தவண்ணம் இருக்க அவரது விடுதியில் முன்பதிவுகள் ஆரம்பித்தமை குறித்து நாமும் மனமகிழ்ந்தோம்.

தெருவோர விற்பனையாளர்களின் துரித உணவு மற்றும் சிற்றுண்டிகள், சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தவை. ஆனால் மூன்று மாத கால முடக்கம் பலரையும் வாழ்வாதாரத்திற்கு எந்த வழியும் இல்லாமல்செய்துவிட்டது. பட உதவி: georgelucas.com

இருளை மறைக்கும் ஒளி

சமூக இடைவெளி பேணுதல் என்பது சில காலத்துக்கு விதியாக நடைமுறையில் இருக்கும் நிலையில், பயணிகள் பெரும்பாலும் பாரிய விடுதிகளை விட தம்மையே தெரிவு செய்யக்கூடும் என சுயாதீன விடுதி உரிமையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். ஹப்புத்தளையிலுள்ள ஒரு பங்களாவில் பல்வேறு விதமான தாவரங்களுடன் தோட்டக்காரர்களின் ஒரு சிறு குழு அவற்றை மீள பயிரிடுவதில் மும்முரமாக இயங்கி வருவதை பார்க்கையில் இக்கருத்தினை மேலும் வலுவடையச் செய்தது. விருந்தினர்களின் உயர்ந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பொருட்டு Thotalagalaன் பணியாளர்கள் இப்போது புதிய உணவு வகைகளை பரிசோதிப்பதுடன் பயிற்சியும் பெறுகின்றனர்.

“மக்கள் மீண்டும் சகஜநிலைக்கு திரும்பிவர ஆரம்பித்ததும், அவர்களது விடுமுறையை கழிக்க சனத்திரளற்ற ஒதுக்குப்புறமான பகுதிகளையே தேடுவர். ஆகவே  பெரும் உயர்ரக விடுதிகளை எம்மைப்போன்ற சிறு விடுதிகளுக்கான கேள்வி ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்குமென நினைக்கிறேன்” என சிறு சொகுசு விடுதியான தொட்டலகலவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளரான தினுக விஜேகோன் கூறினார்.

ஏனைய சுயாதீன விடுதிகளை போன்றே தொட்டலகலவும் “பொறுத்திருந்து பார்ப்போம்” என்ற மனப்பாங்கை இந்த மறுதொடக்கத்தின் மீது கொண்டுள்ளது. “வருகை தரும்போது தனிமைப்படுத்தல் போன்ற விடயங்கள் நடைமுறையில் இருப்பதால் உலகளாவிய சுற்றுலாவானது மீண்டெழ நீண்ட காலம் எடுக்கும்.அதனை சரிசெய்ய உள்நாட்டு பயணிகளை நோக்கி இத்துறை கவனம் செலுத்த வேண்டும். ஆனால் போட்டியானது பலமாக இருக்கும்” என விஜேகோன் கூறினார்.

ஆகஸ்ட் மாதத்திற்காக தொடலகல முன்பதிவு பற்றி ஏற்கனவே சிலர் தொடர்புகொண்டு கேட்டிருப்பதுடன் டிசம்பர் மாதத்தில் முன்பதிவு செய்வதற்கான விருப்புகளும் காணப்படுவதாக விஜேகோன் சுட்டிக்காட்டினார்.

சுயாதீன விடுதி உரிமையாளர்களிடையே ஒரு பொதுவான நம்பிக்கை தற்போது வெளிப்படுவதை காணமுடிகிறது. எனினும், குறைந்தளவு தங்குமிட வசதி கொண்ட சேவை வழங்குநர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய தேவைகளை நிவர்த்தி செய்தல் குறித்த சில சிக்கல்கள் எழுந்துள்ளன. திக்வெல்ல பகுதியில் நாம் கண்ட, அடமலி இது குறித்து சொல்கையில். “SLTDAன் வலைத்தளத்தில் முன்மொழியப்பட்டதும் இன்னும் கலந்துரையாடலில் உள்ளதுமான வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் சாத்தியமற்றதாகவும் மற்றும் உயர்ரக விடுதிகளுக்கு சார்பானதுமாக உள்ளதுடன் பெரும்பாலான சிறு விடுதிகள், விருந்தினர் வீடுகள் ஆகியவற்றை புறக்கணிக்கும் விதமாகவே இருக்கின்றன” எனக் கூறுகிறார். ஒரு முக்கியமான கருத்தை அடமலி முன்வைத்துள்ளார். இவையெல்லாம் ஒருபுறம் பேசிக்கொண்டு இருக்க, இலங்கையின் சுற்றுலா பயணிகளுள் ஏறத்தாழ பாதி அளவிலானோர் முறைசார தங்குமிட வசதிகளையே எதிர்பார்க்கிறார்கள் எனவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போதைக்கு இதுகுறித்த தெளிவான முடிவுகளை எடுக்கமுடியாத நிலையே உள்ளது

Related Articles