Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

பேரழிவு: கேரள வெள்ளத்தின் கொடூரங்களை காட்டும் படங்கள்

கேரளாவிலிருந்து கிடைக்கப்பெற்ற படங்கள் நம்மை அச்சுறுத்துவதாய் உள்ளன. இந்த இயற்கைப்பேரிடரினால், சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. அண்மைய தகவல்படி, 3.5 கோடி மக்கள், இப்பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 8 வரை, உயிரழப்புகள் 350-ஐ தாண்டியுள்ளது.

பல இலட்ச்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், மொத்த இழப்பு, கிட்டத்தட்ட 20,000 கோடிக்கும் மேல் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கேரள மாநிலமும் வெள்ளத்தில் மிதந்தது.

வெள்ளத்தின் பிறகு, அனைத்து இடங்களும் குப்பைகளால், சிதிலங்களால் நிறைந்திருந்தது. வெள்ள நீர் வடியத்துவங்கியதும், நமக்கு வலியை ஏற்படுத்தும் படங்களும் வெளியாயின.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு, தங்களால் முடிந்தளவு நன்கொடை வழங்க, இந்த லின்க்கிற்கு செல்லவும்: https://milaap.org/fundraisers/helpkeralaroaragain

இயற்கையின் கோரமுகத்திற்கு முன், தவித்துக்கொண்டிருக்கும் மனிதர்களின் நிலையை கீழ்காணும் படங்களில் தெரிந்துகொள்ளலாம்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இன்னும் மக்கள் உதவிக்காக காத்திருக்கின்றனர் (Pic:indiatimes)
சில இடங்களில், சாலைகள் பிளவுபட்டும், சிதைந்தும் உள்ளது (Pic:CSI)
வெள்ளம் பாதித்த இடங்களில், இராணுவ வீரர்கள் மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கின்றனர் (Pic:CityDaily)
தற்போது வரை, உயிரிழப்பு 350 பேர் மற்றும் இலட்ச்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர் (Pic:Al Jazeera)
94 வருடங்கள் கழித்து, இப்போதுதான் பேரழிவை ஏற்படுத்தும் அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது (Pic:indiawest.com)
வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் தற்போது வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கின்றன (Pic:Hindustan)
சாலைகளும், பாலங்களும் முற்றிலும் சேதமடைந்தன. எங்கு நோக்கினும் வெள்ளம் மட்டுமே (Pic:Evartha)
இடுக்கி, வயநாடு, திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு போன்றவை மிக மோசமாக பாதிப்படைந்த பகுதிகளாகும் (Pic:Flipboard)
மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள் பலவும் காப்பாற்றப்பட்டுள்ளன (Pic:Flipboard)

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு, தங்களால் முடிந்தளவு நன்கொடை வழங்க, இந்த லின்க்கிற்கு செல்லவும்: https://milaap.org/fundraisers/helpkeralaroaragain

ஹெலிகாப்டர்களும் உபயோகப்படுத்தப்பட்டதால், பல உயிர்களை காப்பாற்ற ஏதுவாயிருந்தது (Pic:Nep)
இன்னும் கேரளத்தின் சில பகுதிகளில், மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது (Pic:Believers)
குஷ்பு சிங் எனும் நபர், உண்மையான வெள்ள, கள நிலவரங்களை காட்டும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் (Pic:Khushbu)
இதன்மூலம் கடற்படையும் தங்களால் முடிந்த உதவியை செய்தது (Pic:therahnuma)
பெருவாரியான மக்கள், 2000 தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் (Pic:Onm)
கேரள முதல்வர் பினராயி விஜயன், அனைவரையும் தொடர்புகொண்டு, வெள்ள பாதிப்பிலிருந்து கேரளத்தினை மீட்டெடுக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார் (Pic: DNA India)
பிரதம மந்திரி நரேந்திர மோடி, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, ரூபாய் 500 கோடி நிவாரண நிதியாக வழங்கினார் (Pic:indian)

மேற்கண்ட படங்கள் அனைத்தும் கேரளத்தின் மிக மோசமான நிலையை எடுத்துரைக்கும். இந்த சூழலில் ஒரு முக்கியமான முடிவெடுக்கும் படியை நாம் எடுத்து வைக்க வேண்டும். அவர்கள் தனித்துவிடப்பட்டவர்களாக, உதவியற்றவர்களாக இருப்பதாய், அவர்கள் நினைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தேசமும், அவர்களுடன் இருப்பதாய் உணர்த்த வேண்டும். அவர்கள் தோல்வியுற்றவர்கள் போல் கருத இடம் தரக்கூடாது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு, தங்களால் முடிந்தளவு நன்கொடை வழங்க, இந்த லின்க்கிற்கு செல்லவும்: https://milaap.org/fundraisers/helpkeralaroaragain

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவும் விதமாக ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்கிறது ரோர் இந்தியா. #RoarForKerala இந்த பிரச்சாரம் தொடர்பான மற்ற கட்டுரைகளைக் காண கீழே உள்ள லிங்குகளை காணவும்

Web Title: In Photos Flood Situations in Kerala, Tamil Photo Story

Featured Image Credit: axios

Related Articles