Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

கேரள வெள்ளம் சசி தரூர்

கேரள வெள்ள  பேரழிவு நிகழ்ந்தேறி சில வாரங்களே கடந்த நிலையில்,  ஒரு விசித்திரமான விவாதம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. அது வேறொன்றுமில்லை, வெளிநாட்டிலிருந்து வரும் உதவிகளை ஏற்கலாமா? அல்லது கூடாதா? என்பது தான் அது.

இந்த ஆண்டு, சூலை மாதந்த்தின் போது வந்த வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டே, கேரள மாநில அரசு, மத்திய அரசிடம் ரூ. 831.10 கோடியை, வெள்ள நிவாரண நிதியாக வழங்குமாறு முறையிட்டது, ஆனால் மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிதியின் தொகை ரூ. 80 கோடி மட்டுமே.  இதனைத் தொடர்ந்து சூலை 30,2018 அன்று லோக் சபாவில் மேலும் நிதி தேவைப்படுவதாகவும், அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டேன். அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

Home Minister (Pic: youtube)

இதே வெள்ளம் ஆகத்து மாதத்தின் மத்தியில் மிகவும் தீவிரமடையும்போது, நிலையை புரிந்துகொண்டு கேரள மாநில அரசு மத்திய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் நிதியிலிருந்து ரூ.1220 கோடியை நிவாரண நிதியாக வழங்கக்கோரி முறையிட்டனர்.  வெள்ளத்தின் தீவிர நிலையை புரிந்தும் மத்திய அரசு ஆகத்து 13,2018 அன்று கேரளா வின் வெள்ள நிவாரணத்திற்கு ஒதுக்கிய நிதி ரூ.100 கோடி மட்டுமே., இதுவும் கேரளாவிற்கு வெள்ள நிவாரணத்திற்கு உடனடியாக தேவைப்படும் தொகை ரூ.3000 கோடி என்று மாநில நிதித்துறை அமைச்சர் வெளிப்படையாக தெரிவித்த பின்.

ஆகத்து 18,2018 ஆம் தேதி இந்திய பிரதமர், கேரளாவை பார்வையிட்டார். கேரளாவை பார்வையிட்டபின் கூடுதலாக ரூ.500 கோடி வழங்குவதாக தெரிவித்தார். இவைஅனைத்தையும் உடனடியாக வழங்குவதாக உறுயளித்தார். இந்த தொகை கேரள அரசு முறையிட்ட தொகைக்கு பாதிக்கும் குறைவான தொகை தான். அது உண்மையில் (இது கேரளாவின் மறுகட்டமைப்பின் தேவையை உணராமல் எடுத்த முடிவு)

ஐக்கிய நாடுகளின் சார்பாக கேரள வெள்ள நிவாரணத்திற்கு உதவும் விதமாக ரூ.700 கோடி வழங்கப்பட்டது, இதற்கு மோடியும் தனது டிவிட்டரில், ஷேக் மொஹமத் பின் ரஷீத் அல் மக்தோமுக்கு நன்றி தெரிவித்திருந்தார். ஐக்கிய அரசின் உதவி நிராகரிக்கப்படலாம் என்று மோடியின் அரசு ஊடகத்திற்கு தெரியப்படுத்தியிருக்கின்றது. ( இருப்பினும் மத்திய அரசு ஒரு முறையான அறிக்கையை வெளியிட்டிருக்கவில்லை). மோடி அரசின் நிலைப்பாடு முந்தைய UPA அரசின் போது சுனாமி நிவாரணத்திற்கான வெளிநாட்டு உதவியை ஏற்றுக்கொள்ளாத நிலைபாட்டிலேயே பா ஜ க வும் தொடர்ந்து இருக்கும் என்று பா ஜ க செய்தித் தொடர்பாளர் விளக்கினார்.

Prime Ministers (Pic: livemint/azadhindnews)

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் (2005) 11ஆம் பிரிவின் படி, பேரிடர் காலங்களில் சரியான திட்ட கட்டமைப்போடு, இந்தியாவிலேயே அனைத்து நிவாரண பணிகளையும் மேற்கொள்ள திட்டமிட வேண்டும். தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின் வரையறையில் 9.2 ஆம் பத்தியில், தெளிவாக விளக்கும் ஒன்று, “பேரிடர் மீட்பு பணி என்கின்ற பெயரில் வெளி நாட்டிடம் கையேந்தக்கூடாது என்றிருக்கிறது.  எனினும், எந்த ஒரு வெளி நாட்டு அரசு தானாகவே முன் வந்து நம் நாட்டின் பேரிடர் காலத்தில் உதவ முன் வந்தால், இரு நாட்டின் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் கருத்தில் கொண்டு ஏற்றுக்கொள்ளலாம்.”

ஐக்கிய நாடுகள் அளிப்பதாக அறிவித்த உதவி, இந்தியா, கேட்டுக்கொண்டமையினால் வழங்க ஒப்புகொள்ளவில்லை, ஒரு நல்லிணக்க நோக்கத்தோடு ஐக்கிய நாடுகளே உதவ முன் வந்தமையால். அந்த உதவியை நம் நாடு முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள உகந்தது.

கதாரின் வெளியுறவுத்துறை அமைச்சர் அகத்து 19,2018 அன்று, 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை கேரள மக்களுக்கு வழங்கினார். மாலத்தீவு ரூ.35 லட்சத்தை உதவித்தொகையாக வழங்கியது. இந்த சிறிய உதவிகளும் முன்பு குறிப்பிட்ட கதைகளின் முடிவு போலவே முடிந்துவிட வாய்ப்பிருக்கிறது.

உண்மையில், வெளிநாடுகளில் உள்ள இந்திய அமைப்புகளுக்கு உதவியளிக்கும் வாய்ப்புகளை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

தாய்லாந்து நாடும் உதவியளிக்க விருப்பம் தெரிவித்திருக்கின்றது.

இருப்பினும், தாய்லாந்தின் தூதுவர் ஆகத்து 22,2018ல், “கேரள வெள்ள நிவாரணத்திற்கான வெளிநாட்டு நன்கொடைகளை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. பாரத மக்களே எங்களின் இதயங்கள் உங்களுக்காக வருத்தப்படுகின்றது” என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

Foreign Currencies (Pic: steemit)

இதற்கான காரணம் தெளிவாக குறிப்பிடவில்லை என்றாலும், இதற்கு முந்தைய பேரிடர் காலத்தில் இந்தியா தனது வளங்களைக் கொண்டே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. வெள்ள நிவாரணத்திற்கென்று அரசு தற்போது அளித்திருக்கும் தொகை மற்றும் நிலுவையிலுள்ள கோரிக்கைகள் மேலும் மாநிலத்தின் சேதமடைந்த உள்கட்டமைப்பிற்கு தேவையான தொகையென மொத்தமான தேவை கிட்டத்தட்ட ரூ .20,000 கோடி வரை இருக்கும்.

எது எப்படியிருந்தாலும், இப்போது பின்பற்றும் கொள்கை கட்டமைப்பு 2016 ஆம் ஆண்டு வடிவமைத்தது.  அதற்கு முந்தைய ஆண்டுகள், 2004லிலும், 2013லிலும் கடைபிடித்த கட்டமைப்பிலிருண்டு வேறுபட்ட ஒன்று. மோடி அரசின் சொந்தக் கொள்கையின் கீழ், நட்பு ரீதியான வெளிநாட்டு அரசினால் தானாக முன்வந்து வழங்கப்படும் உதவி ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்கு எந்த குறிப்பான காரணமும் இல்லை. ஆகத்து 2005ல் கத்ரீனா சூறாவளி தாக்கிய பிறகு வந்த வெளியுறவு உதவியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.

10 லட்சம் நபர்கள் மாற்று இடத்தில் அமர்த்தி வைக்கப்பட்டிருக்கின்றனர், 39 பாலங்கள் சேதமடைந்துள்ளன, 80,000 கி.மீ  சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன, மேலும் 50,000 வீடுகள் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளது. புதுதில்லியிலிருந்து இயங்கும் மத்திய அரசால், இத்தகைய சேதம் ஏற்பட்டதற்கு  உகந்த நிதியை வழங்க முடியுமென்றால், கேரள மக்களிடன் ஏன் இதற்கு போதுமான நிதியை வழங்கவில்லை என்று விளக்கம் வழங்கிட வேண்டும்.

2001 ஆம் ஆண்டு குஜரத்தில் உள்ள பூஜ் நகரில்  ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது வெளிநாட்டிலிருந்து கிடைக்கப்பெற்ற உதவிகளை ஏற்றுக்கொண்டது. ஐக்கிய அமைப்புகளான யூ.என்.டி.பி, WHO, UNICEF, ILO க்களிடமிருந்து உதவித் தொகையாக கேட்டது USD 42,670,702. குறிப்பாக ஐக்கிய அமைப்புகளின் அதிகாரிகள், மனித நேய ஒருங்கிணைப்புக்காக பூகம்பம் நடந்த மறுதினமே ஒன்று சேர்ந்து அளித்த நிதி USD150,000

பூஜ்ஜின் மக்களுக்கு சர்வதேச அமைப்பு உதவியதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  ஐ நா வின் முகவர்கள் மத்தியில் இந்தியா ஒரு நன்மதிப்போடு தான் இன்று இருக்கின்றது. இப்போது, அத்தகைய வெளிநாட்டு உதவிகளை ஏற்றுக்கொள்வதில் எந்த ஒரு இழுக்கும் இந்தியாவின் பெயருக்கு வந்துவிட போவதில்லை. சர்வதேச கூட்டமைப்பின் கோட்பாடு “ஒன்று அனைத்துக்குமானது மற்றும் அனைத்தும் ஒன்றுக்கானது” என்பது தான். நமது நாடும், அண்டை நாடுகளில் நிகழ்ந்த இதைப்போன்ற பேரிடர் காலங்களில் தானாகச் சென்று உதவியிருக்கின்றது- குறிப்பாக நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இரான் நாடுகளில் பூகம்பம் வந்தபோதும், வங்கதேசத்திலும், மியான்மரிலும் வெள்ளம் வந்த போதிலும், உடனடியாக இந்தியா சென்று உதவியது. நாம் உதவியது போல மற்றவர்கள் ஏன் நமக்கு உதவிடக்கூடாது?

கேரளாவுக்கு காலம் தாண்டிய  மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வுக்கும்  சிறப்பு நிதி தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், NDRF ன் நிதி உடனடி நிவாரண உதவிக்காக மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. ஒக்கி புயலின்போது மாநில அரசு, மறுகட்டமைப்புக்கும், புனர்வாழ்வுக்கும் என ரூ.7304 கோடியை நிவாரண நிதியாக வழங்குமாறு கேட்டது, அதனை மத்திய அரசு மறுத்துவிட்டது. மத்திய அரசு உடனடி நிவாரணத்திற்கு என்று கேரளாவிற்கு வழங்கியது ரூ. 133 கோடி மட்டுமே. ( லோக் சபாவில், சூலை 24 அன்று கூட பேசுகையில் மத்திய அரசை இந்த விவகாரத்தில் ஏன் முடிவெடுக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு இன்று வரை உள்ளாட்சித்துறையிலிருந்துசரியான பதில் கிடைக்கவில்லை.) கேரளா இன்று வரை வெள்ள நிவாரண நிதியில் ஏமாற்றப்பட்டு வருகின்றது.

Kerala Flood (Pic: chennaimemes)

ஆம், இந்தியா ஒரு பெருமைக்குரிய நாடு, தன் வளங்களை சார்ந்தே செயல்பட விரும்பும் நாடு. நம் அரசு தன்னை ஒரு உதவி வழங்கும் பெருங்கருவியாக கருதுகிறது, பெறுநர் ஒருவரென்று இல்லை. தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எமது வளங்கள் போதுமானதாக இருந்தாலும், நாம் சுய-சார்புடையதாக இருக்க வேண்டும் என்பதில் கருத்தாகயிருக்கின்றது.இவ்வாறு மத்திய அரசு கருதும்போது, மிகப்பெரிய பேரிடர் நிகழ்ந்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நேரத்தில் சுய சார்போடு உதவிகளை வழங்கிடாமல், காட்டுமிராண்டித்தனமாகவும், பொறுப்பின்மையோடும், நிவாரண நிதியை வழங்க மறுக்கின்றது. எந்தவொரு கொள்கையையும் துன்புற்றிருக்கும் நம் குடிமக்களை பார்த்து கண்டுகொள்ளாமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது.

முடிவாக நான் கூற விழைவது, வெளிநாடுகளிடம் திருவோடு ஏந்தி நிற்க சொல்லவில்லை. மாறாக, அண்டை நாட்டினர், வலிய வந்து நமக்கு உதவும் பொருட்டு கொடுக்கின்ற சிறிய உதவியை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்ப்பது சரியில்லை. இது நாம், இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய அண்டை நாடுகள் வழங்குவதாக இருந்த உதவிகளை நல்லிணக்கத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டிய தருணம்.

சசி தரூர், இந்திய பாராளுமன்ற உறுப்பினராவார் மற்றும் இது எழுத்தாளர் தரூரின் சொந்த கருத்தாகும்.

Web Title: Kerala Flood Insufficient Funds For Rehabilitation, Tamil Article

Featured Image Credit: livemint/indianexpress

Related Articles