உங்களது ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களை அறிந்து கொள்ளுங்கள்

இந்த ஆண்டு இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மொத்தமாக 35 வேட்பாளர்களின் பெயர்கள் முடிவாகியுள்ளன. இது ஒரு சாதனை மிக்க  எண்ணிக்கையாகும். இதற்கு முன்னர் 2010ம் ஆண்டு மிக அதிகளவிலான எண்ணிக்கையாக 22 பேர் தேர்தல் களத்தில் போட்டியிட்டனர். பல கட்சி முறைமை இருந்தாலும், இலங்கை அரசியலில் வரலாற்று ரீதியாக இரண்டு மாபெரும் கட்சிகளே அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன, மேலும் இவ் இரண்டு வலுவான கட்சிகளின் அல்லது கூட்டணிகளின் போட்டியாளர்கள்தான் தேர்தல் களத்தில் முதன்மையானவர்களாக இருந்தனர். எவ்வாறாயினும், இவ் ஆண்டு, பல புதிய போட்டியாளர்கள் தேர்தல் களத்தில் நுழைந்துள்ளனர் – இதனால் மூன்றாம் தரப்பு மாற்றீட்டை சாத்தியமான தேர்வொன்றாக மாற்றுவதோடு, மேலும் எந்தவொரு கட்சியும், கூட்டணியும் அல்லது வேட்பாளரும் பெரும்பான்மையைப் பெற மாட்டார்கள் என்ற ஊகங்களுக்கும் இது வழிவகுக்கிறது. ஆகவே இதன் மூலம் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சந்தர்ப்பம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாட்டில் நடைபெறும் தேர்தல் என்பது எப்போதுமே முக்கியமானதொரு நிகழ்வாகும்  – இச் சந்தர்ப்பத்திலேயே ஒரு குடிமகன் மிகச் சில முறைகளில் ஒரு முறையாக தனது ஏகபோக உரிமையான வாக்களிப்பு உரிமையைப் பயன்படுத்துகிறான்.

ஆகையால் இந்தத் தேர்தலும் ஏனைய தேர்தல்களிலிருந்து எவ்வகையிலும் வேறுபட்டதல்ல. ஆனால் சில வேட்பாளர்கள் எவ்வித சிரமமும் இன்றி தேசிய மற்றும் தனியார் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்துகையில், ஏனைய போட்டியாளர்கள் தெளிவற்ற நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகையால் மக்களும் இவர்கள் பற்றி தெளிவற்ற நிலையில் உள்ளனர் – எனவே நீங்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய மிக அடிப்படையான தகவல்களின் சுருக்கங்களை உங்களுக்காக இங்கே தருகிறோம். இந்தத் தேர்தலின் போது, உங்களின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகள் கணக்கில் கொள்ளப்படும் என்பதை நினைவில் கொள்க. எனவே இத் தேர்தல் பற்றியும் அதில் பங்கு பெரும் வேட்பாளர்கள் பற்றியும் தெளிவாக அறிந்து கொண்டு, புத்திசாலித்தனமாக உங்களது வாக்குகளை உபயோகிங்கள்.

Related Articles