Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

இலங்கை ஜனாதிபதிகள் (1972-2019)

இலங்கைத் தீவானது மன்னர்கள் ஆட்சி, ஐரோப்பியர்களின் ஆட்சி போன்றவற்றை எல்லாம் கடந்து தற்போது ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு செயற்பட்டு வருகின்றதொரு நாடு என்பது நாம் அறிந்ததே. புராண இதிகாசங்களில் இலங்கை என்ற பெயர் எவ்வளவு பரிட்சயமோ அந்த அளவுக்கு உலக அரசியல் மேடைகளிலும் இலங்கைக்கென்று தனி சிறப்பானதொரு இடம் உண்டு எனலாம். 1972 ஆம் ஆண்டில் இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை பலர் ஜனாதிபதி சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்துள்ளனர். அப்படி இலங்கையை ஆட்சி செய்த ஜனாதிபதிகள் பற்றிய சில தகவல்களை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள். 

வில்லியம் கொபல்லாவ

முன்னாள் ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவ

1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்டு சிலோன் என்ற பெயர் ஸ்ரீலங்கா என மாற்றப்பட்டதன் பின்னர்,  கட்சி சார்பின்றி பதிவியேற்ற இலங்கையின் இலங்கையின் முதல் ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவ ஆவார். அக்காலத்தில் நிறைவேற்று அதிகார முறை அறிமுகப்படுத்தப்படாத காரணத்தினால் இலங்கையின் நிறைவேற்று அதிகாரமற்ற ஜனாதிபதியும் இவராவார். இவரின் பதவி காலம் – 1972 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு  வரையாகும். 

ஜே.ஆர். ஜயவர்தனா

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனா

இவர் இலங்கைக் குடியரசின் இரண்டாவது ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதியும் ஆவார். 1978 ஆண்டில் இவரின் ஆட்சி காலத்தில் தான் ஜனாதிபதி நிறைவேற்று அதிகார முறையானது அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக விளங்கியதோடு பல அரசியல் பதவிகளை வகித்துள்ளார். இவர் இரண்டுமுறை இலங்கையின் ஜனாதிபதியாக இருந்துள்ளார். இவரின் ஆட்சிகாலமானது 1978 ஆண்டு தொடங்கி 1989 ஆண்டு வரை ஆகும். 

ரணசிங்க பிரேமதாஸ 

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 

1989 ஆண்டு தொடங்கி 1993 ஆண்டு வரை இலங்கையின் ஜனாதிபதியாகத் திகழ்ந்த ரணசிங்க பிரேமதாஸ அவர்கள், 1978 தொடக்கம் 1989 வரையான ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களின் ஆட்சி காலத்தில்  இலங்கையின் பிரதமராகவும் இருந்துள்ளார். 1993 ஆண்டு மே தின ஊர்வலமொன்றின் போது தற்கொலைக் குண்டுதாரியால் கொலை செய்யப்பட்டார். 

டிங்கிரி பண்டா விஜயதுங்க (டி.பி. விஜயதுங்க)

முன்னாள் ஜனாதிபதி டிங்கிரி பண்டா விஜயதுங்க

பிரமேதாச அவர்களின் திடீர் மறைவுக்கு பின்னர், உடனடியாக ஜனாதியாக நியமனம் பெற்றார். கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட டிங்கிரி பண்டா விஜயதுங்க அவர்கள் இலங்கையின் 4 வது ஜனாதிபதியாவார். ரணசிங்க பிரேமதாஸ அவர்களின் ஆட்சி காலத்தில் இலங்கையின் பிரதமராக விளங்கிய இவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கையின் மூன்றாவது ஜனாதிபதி ஆவார். இவரின் ஆட்சி காலமானது 1993 ஆண்டு மே மாதம் 2 ஆன் திகதி முதல் நவம்பர் 12 திகதி 1994 ஆம் ஆண்டு வரை மட்டுமே நீடித்தது. 

சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க

இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரான சந்திரிக்கா பண்டாரநாயக இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாவார். பாரிஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பட்டபடிப்பினை முடித்த இவர், சிங்களம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். இவரின் தந்தையான பண்டாரநாயக குமாரதுங்க இலங்கையின் பிரதமராகவும் பின்னர் அவரின் இறப்பை தொடர்ந்து 1960 ஆம் ஆண்டில் சந்திரிக்காவின் தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமராகவும் செயற்பட்டுள்ளார். 1994 ஆம் ஆண்டு மக்கள் முன்னணி தலைமையிலான ஆட்சியில் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட இவர், அதே ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தெரிவானார். 1994 முதல் 2005 வரை இரண்டு தடவைகள் தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார் சந்திரிக்கா. இதனால் இவர் இலங்கையின்  நிறைவேற்று அதிகாரம் கொண்ட 4வது ஜனாதிபதியானார். இதுவரை இலங்கையை ஆட்சி செய்த ஒரே ஒரு பெண் ஜனாதிபதி இவராவார். 

மஹிந்த ராஜபக்ஷ 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 

இலங்கையில் அம்பாந்தோட்டையை பிறப்பிடமாகக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ 1970 ஆண்டு இலங்கை சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர். அரசியலில் பல பதிவிகளை வகித்த மஹிந்த ராஜபக்ஷ, 2004 ஆம் ஆண்டு 6 ஏப்ரல் திகதி முதல் 2005 நவம்பர் 19 ஆம் திகதி வரை இலங்கை சுதந்திரக் கட்சியின் பிரதான உறுப்பினராக இருந்து பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார்.

பின்னர் 2005 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் 6 ஆவது ஜனாதிபதியானார்.  2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாகவும் இலங்கையின் ஜனாதிபதியானார். தொடர்ந்து 2015 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்ட மஹிந்தவினால் பெரும்பான்மையான வாக்குகளை முடியவில்லை. தொடர்ந்து இரண்டு முறை பதவிவகித்ததால் 5 ஆம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானார் மஹிந்த ராஜபக்ஷ. 

மைத்திரிபால சிறிசேன. 

தற்போதைய மைத்திரிபால சிறிசேன

இலங்கை பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேன அவர்கள் குண்டசாலை விவசாயக் கல்லூரியில் 1973 ஆம் ஆண்டு பட்டப் படிப்பினை முடித்தவர். 1989 ஆண்டு அரசியலுக்குள் பிரவேசித்த இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராவார். 1994 முதல் 2014 வரையான காலப்பகுதியில்  அமைச்சரவையில் பல முக்கியப் பொறுப்புக்களை வகித்த மைத்திரி, 2015 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் இலங்கை அரசியல் அமைப்பின் படி 6 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாவர். 

இத்தனை வருடங்களில் 7 ஜனாதிபதிகளைப் பாரத்த இலங்கை மக்கள் தற்போது தங்களுக்கான 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு தயாராகி வருகின்றனர். ஒரு நாட்டிற்கு சரியான தலைவனை தேர்ந்தெடுப்பதென்பது ஒவ்வொரு பிரஜையின் கடமையாகும். ஆகையால் வருகின்ற நவம்பர் 16 ஆம் திகதியன்று நடைபெறப் போகும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொருவரும் சிந்தித்து வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம்.

Related Articles