Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

சுற்றுலா அமைச்சு மற்றும் சுற்றுலா அதிகார சபையின் COVID-19 நிவாரணம்.

அரசாங்கத்தின் COVID-19க்கு பின்னரான நிவாரண வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இலங்கையின் பொருளாதாரத் துறைகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில்,பல்வேறு நிவாரணத்திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது. COVID-19 பரவலால் ஏற்பட்ட முடக்கம் மற்றும் பயணத்தடைகள் காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்ட பல துறைகளுள் சுற்றுலாத்துறையும் பிரதானமானதாகும். சுற்றுலாத்துறையின் மீள் எழுச்சிக்கு உதவும் வண்ணம் இலங்கை சுற்றுலாத்துறையும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையமும் அதன் பங்குதாரர்களுக்கு புதிய நிவாரணத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி சுற்றுலாத் துறையில் நேரடியாக ஈடுபட்டுள்ள மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தில் (SLTDA) பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கை நிலையையும் தக்கவைத்துக்கொள்ள உதவும் நோக்குடன், அங்கீகரிக்கப்பட்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் பின்வருமாறு.

COVID-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கு மற்றும் பயணத்தடையினால் பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத்துறை எதிவரும் ஆகஸ்ட் முதலாம் திகதி ஆரம்பமாகும் வெளிநாடு பயணிகளுக்கான விமான போக்குவரத்துடன் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
படம் : காலி – இலங்கையின் முக்கிய சுற்றுலாத்தலங்களுள் ஒன்று.
  1. SLTDA இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட தங்கும் விடுதி வழங்குநர்கள் மற்றும் பயண முகாமைத்துவ நிறுவனங்களுக்கு (DMC) இலங்கை வங்கி (BOC) மூலம் ஊதியம் வழங்க,  அரசாங்கத்தின் COVID-19க்கு பின்னரான நிவாரண வரவு செலவுத் திட்டத்தின் கீழ்,  4% வட்டியுடன் கூடிய கடனை பிணையில்லாமல் வழங்க உதவுதல். கடன் வசதிக்கு விண்ணப்பிக்கும்போது விடுதி உரிமையாளர்களால் வழங்கப்பட்ட ஊ.சே.நி/ஊ.ந.நி (EPF/ETF) பதிவுகளின் அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு ஒரு ஊழியருக்கு வங்கி அதிகபட்சமாக ரூ. 20,000/=  நேரடியாக செலுத்தும். அதிகாரசபையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து விடுதி வழங்குநர்கள் மற்றும் DMCகளின் விபரங்களை SLTDA வழங்கும்.
  1. SLTDA இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகளை வழங்கும் 850+ நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பளத்தை வழங்க இதே போன்ற கடன் வசதி ஏற்பாடு செய்யப்படும். இதில்; உணவகங்கள், சுற்றுலாபயணிகளுக்கு ஏற்ற உணவு உட்கொள்ளும் இடங்கள், ஸ்பா மற்றும் ஆரோக்கிய மையங்கள், ஸ்பைஸ் கார்டன், சுற்றுலாப் பயணிகளுக்கான கடைகள் மற்றும் நீர் விளையாட்டு மையங்கள் என்பன அடங்கும். கடன் வசதிக்கு விண்ணப்பிக்கும்போது நிறுவன உரிமையாளர்களால் வழங்கப்பட்ட ஊ.சே.நி/ஊ.ந.நி (EPF/ETF) பதிவுகளின் அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு ஒரு ஊழியருக்கு வங்கி அதிகபட்சமாக ரூ. 15,000 / =  நேரடியாக செலுத்தும். 
  1. பயணமொன்றிற்கான பணி அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட மற்றும் ஊ.சே.நி/ஊ.ந.நி (EPF/ETF) நிதிக்கு உள்ளடக்கப்படாத சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வாகன ஓட்டுநர்களுக்கான உதவி: இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூ .20,000 மற்றும் ஓட்டுநர்களுக்கு ரூ .15,000/= எனும் முறையில் SLTDA ஆனது உதவிக்கொடுப்பனவினை ஒருமுறை செலுத்தும். இந்தக் கொடுப்பனவுகள் அதிகாரசபையால் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும்.
  1. இலங்கை மின்சார வாரியத்திற்கும் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கும், SLTDAவில் பதிவுசெய்த விடுதி வழங்குநர்களிடமிருந்து  2020 மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை பெறவேண்டிய மீதமுள்ள கட்டணத்தொகைக்கான கால அவகாசத்தினையும், ஒட்டுமொத்த கட்டணத்தை தீர்க்க 12 மாத தவணை திட்டத்தையும் வழங்க அறிவுறுத்தல்கள் முவைக்கப்படும். இந்த காலகட்டத்தில் மின்சாரம் மற்றும் / அல்லது நீர் கட்டணங்கள் செலுத்தப்பட்டால், மொத்தம் 12 மாத கால அவகாசத்தை உறுதிப்படுத்த கூடுதல் கடன்தவணை வழங்கப்பட வேண்டும்.
  1. சுற்றுலா நோக்கங்களுக்காக குத்தகைக்கு விடப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்படும் ஆறு மாத கால அவகாசத்தை தற்போதுள்ள குத்தகை ஒப்பந்தத்தை கருத்தில் கொள்ளாமலும், சலுகைக் காலத்தில் அடிப்படை கட்டணமின்றியும் 12 மாதமாக நீட்டிக்க மத்திய வங்கியினால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை வழங்கும் வழிமுறைகளை வழங்க வேண்டும்.

மேற்குறித்த நிவாரண நடவடிக்கைளில் எண் 1 மற்றும் 2 இல் குறிப்பிட்டுள்ள நிவாரணங்களை பெறத்தேவையான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் குறித்தும் திருப்பிச்செலுத்தும் காலம் குறித்தும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) அறிவுறுத்தியுள்ளது.

 தகுதி மற்றும் நிபந்தனைகள்:

  • SLTDA-வில் பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவானது அதிகாரசபையினால் செயற்படுத்தப்பட்டுவரும் நிலையில் உள்ள, மேலே உள்ள பிரிவுகளின் கீழ் வரும் அனைத்து நிறுவனங்களும் தகுதியுடையவை. (வெளிநாட்டு முதலீடுகள் / உரிமையாளர்கள் உட்பட.
  • சுற்றுலா மேம்பாட்டு வரி (TDL) செலுத்திய நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • அனைத்து கடன் விநியோகமும், 2019 ஆம் ஆண்டில் பணியாளர்களது ஊ.சே.நி (EPF) கொடுப்பனவுகளைச் செலுத்திய உரிமையாளர்களுக்கு செல்லுபடியாகும்.
  • அனைத்து விநியோகங்களும் இலங்கை வங்கி(BoC) வழியாக வழங்கப்படுவதுடன், மேலும் அவை இலங்கை வங்கியினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய  பெருநிறுவன உத்தரவாதம் அல்லது தனிப்பட்ட அல்லது சுயாதீன உத்தரவாதத்திற்கு உட்படுத்தப்படும்.
  • கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தும் வரை, கடன் பெற்றவர் SLTDA இல் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் உடன்படிக்கை மீறப்பட்டவராக கருதப்படுவார்.
  • அனைத்து கடன் விநியோகமும் மாதந்தோறும் ஊழியர் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்.
  • 2020 ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் எளிய தொழில் மூலதனக் கடனைப் பெற்ற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தகுதி பெறும்.

திருப்பிச் செலுத்துதல்.

  • பொருந்தக்கூ டிய வட்டி விகிதம் ஆண்டுக்கு 4% ஆகும்.
  • இது ஐந்து (5) ஆண்டுகால கடனாகவும் இரண்டு ஆண்டு சலுகை காலத்துடனும் வழங்கப்படும்.
    இலங்கை சுற்றுலாத்துறை  கடந்த 2019 மற்றும் இந்த 2020ல் இரு பெரும் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள நீலையில் அதன் சரிவில் இருந்து மீளும் முற்போக்கான நடவடிக்கைகளை கையாளத்தொடங்கியுள்ளது.

இலங்கை சுற்றுலாத்துறை குறித்த அனைத்துவிதமான தகவல்களையும் பெற 1912 எனும் இலக்கத்தினை அழைக்கமுடியும்.

Related Articles