நாம் தூய காற்றை சுவாசிக்கின்றோமா? இதைப் பற்றி ஒரு நிபுணரிடம் கேட்கலாம்.

Brought to you by

மாசற்ற நீரையும், இரசாயனமற்ற உணவையும் இப்போது கருத்திற்கொள்கிறோம். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்று பற்றிச் சிந்தித்துள்ளோமா?

30 நாட்கள் உணவின்றியும், 3 நாட்கள் நீரின்றியும் மனிதனால் உயிர்ப்பிழைத்திருக்க முடியும்; இருப்பினும் சுவாசிக்காமல் 3 நிமிடம் கூட தாக்குப்பிடிக்க இயலாது.   உயிர்ப்பிழைத்திருக்க அவசியமானவற்றில் 70%ஐ காற்றேக் கொண்டுள்ளது. இது நாளொன்றுக்கு 2000 கலன்களிலும் (Gallons) பார்க்க அதிகமானது.

வளி மாசடைதல் உலகளாவிய ரீதியில் நிகழ்ந்தாலும் மறைப்பதற்கும் மறுப்பதற்கும் முடியாத பிரதான காரணி மனித நடவடிக்கைகளே. நகர மயமாக்கல், மக்காத எரிபொருள் பாவனை மற்றும் இரசாயனமிக்க விவசாயச் செயற்பாடுகள் காரணிகளாக அமைகின்றன.  ஆச்சர்யப்படும் விதமாக புகைப்பொருள் பாவனை, மாசடைவை ஏற்படுத்தக்கூடியவற்றை எரித்தல், வீட்டுப்பாவனைகளின் போதான புகை ஆகியன உள்ளக வளிமாசடைவில் பெரிதும் பங்காற்றுகின்றன.

21ம் நூற்றாண்டில் நகரமயமாக்கலே அனைத்திலும் செல்வாக்கு செலுத்தும் பிரதான காரணியாகும். 2018ல் 55% மான மனிதக்குடியிருப்புகள் நகர்புற பகுதியிலேயே அமைந்திருந்தன. இது 2050களில் 68% வரை அதிகரிக்கலாமெனவும் அது ஆசிய மற்றும் ஆபிரிக்கப் பகுதிகளில் தான் நிகழுமெனவும் எதிர்வு கூறப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் காற்றின் தரத்தை மிகமோசமாகப் பேணும் நாடுகளின் தரவரிசையில் இலங்கைச் சற்றுக்கீழிருந்தாலும், மேலும் அதை விருத்தியாக்கக் கூடிய வாய்ப்புகள் பலவுள்ளது. படஉதவி : IQAir

ஆக, நம் சூழலில் தனிநபர் மற்றும் குழுவாக மேற்கொள்ளும் வளிமாசடைதலுக்கான செயற்பாடுகளை எவ்வாறு இனங்காண்பது? முக்கியமாக நாம் கருத்திற்கொள்ளவேண்டிய பிரதான அம்சங்கள் எவை?

இதோ ஒரு நிபுணரின் சில அறிவுறுத்தல்கள்.

உள்ளக வளியின் தரம் இலங்கையில் எவ்வாறுள்ளது?

IAQ பின்வரும் வேறுபட்ட பல காரணங்களையும் உள்ளடக்குகிறது. அவையாவன; காற்றோட்டம், வெப்பநிலை, ஈரப்பதன், மாசடைதலுக்கான ஏதுக்கள், VOC (ஆவியாகக்கூடிய இரசாயனப் படிமங்கள்)  மற்றும் வீட்டு அடுப்புகளின் புகை வெளியேற்றம் என்பனவாகும். எனினும் வயது, பால் மற்றும் இனம், கலாசாரம் எனும் அடிப்படையில் வளியின் தரம் பேணப்படுவதன் அவசியம் பற்றிய புரிதல் கூட இதில் செல்வாக்கு செலுத்துகிறது.

Cassie Koelmayer ( Chartered Building Services Engineer) என்பவர் நகரமயமாக்கலின் வளர்ச்சியினால் குறிப்பாக காற்றோட்டமே முன்பெப்போதும் இல்லாத வகையில் இப்போது பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார். 

ஆனால் இலங்கையைப் பொருத்தவரை வளியினைச் சீரமைத்தல் தொடர்பான பொதுவான விழிப்புணர்வு காணப்படாத நிலையில், உள்ளக இடைவெளிகள் மற்றும் IAQஇனால் அறிவுறுத்தப்பட்டுள்ள அரசாங்க விதிமுறைகளை பின்பற்றும் தன்மையும் நிலவுவதில்லை. இதன் விளைவாக பொதுக்கழிப்பிடங்கள் மற்றும் வீட்டமைப்புத் திட்டங்களின் உள்ளிட அமைவுகளில் அபாயங்களை விளைவிக்ககூடிய பூஞ்சணங்கள் பரவுவது சாதாரணமாகிவிட்டது. 

உங்களால்  பூஞ்சணங்களைக் கட்டுப்படுத்தமுடியும்

இலங்கையர்களில் சிலருக்கு ஆச்சர்யப்படத்தக்க வகையில் பூஞ்சணத்துக்கெதிரான நோயெதிர்ப்புச்சக்தி உள்ளது, இருப்பினும் வசிப்பிடங்களில் பூஞ்சணப்பரவலால் சீர்குலைவு உண்டாக்குவதை அனுமதிக்கக் கூடாதென்பது பொது அறிவாகும்.
படஉதவி : Adobe Stock

பூஞ்சணங்கள் பரவ அடிப்படைகளாக இரு விடயங்களை Koelmayer வலியுறுத்துகின்றார்.

 1. அவை அதிகம் காற்றுப் படுமிடம் அல்லது வீட்டின் மேற்பரப்பில் பரவும்.

 2. ஈரலிப்புத்தன்மை.

ஆக பூஞ்சணங்கள் பரவலின் கட்டுப்பாடு வீட்டின் மேற்புறம் மற்றும் ஈரலிப்புத்தன்மை எவ்வாறு கையாள்கிறீர்கள் என்பதில் தங்கியுள்ளது. அதற்கு முக்கியமான இரு வழிமுறைகளை Koelmayer பரிந்துரைக்கிறார்:

1. Bleaching Powder உபயோகித்து கழுவுதல்.

2. அனைத்தையும் உலர்ந்த நிலையில் வைத்திருத்தல்.

இலங்கையில் இது சர்வசாதாரணமாகக் கருதப்பட்டாலும் , சில இலங்கையர்களிடம் அதைக் கட்டுப்படுத்தக்கூடிய எதிர்ப்புதிறன் வளர்ச்சியடைந்துள்ளது. சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகின்ற அதேவேளை, அதிகளவானோர் பூஞ்சணத்தைச் சுவாசித்தாலும் தாக்குப்பிடிக்கக்கூடிய எதிர்ப்புசக்தியினைக் கொண்டிருக்கின்றனர். என Koelmayer சுட்டிக்காட்டுகின்றார்.

வளிச்சீரமைப்பின் போது உள்ளடங்க வேண்டிய முக்கிய கூறுகளாக மூன்று விடயங்களை Koelmayer குறிப்பிடுகிறார்:

1. வெப்பநிலை

2. காற்றோட்டம்

3. ஈரப்பதன்

காற்றோட்டம் ஏன் முக்கியமானது?

கட்டிட வடிவமைப்பின் போது இடைவெளிகளைச் சரியாக அமைக்க வேண்டியது அவசியம். நெடுங்காலத்திற்குமான புரிதலை உண்டாக்கக்கூடிய கட்டாயமான சில பின்பற்றுதல்களே காற்றோட்டத்தின் முக்கியத்துவத்தை உணரச்செய்யும். அவைகளாவன: குறுக்கு காற்றோட்டம், தாவர வளர்ப்புக்கான இடைவெளிகள் (Green spaces) மற்றும் உள்ளகத் தாவரவளர்ப்பு. அத்தோடு குழாய்க் காற்றோட்டம், HEPA வடிகால்கள் மற்றும் வெளியேற்றும் முறைகள் என்பவும் பேசுபொருளாகியுள்ளன.

“காற்றை வெளியேற்றும் முறைமை என்பது உண்மையில் சுத்தமானக் காற்றை  உங்கள் சமையலறைக்குள் உள்வாங்குதல், அதாவது வாயுவின் தன்மையை அறிந்து அதிலிருந்து சுத்தமானக் காற்றை மாத்திரம் வடிக்கட்டி பாவனைக்குட்படுத்துதலாகும்.” என Koelmayer குறிப்பிடுகிறார்.

இலங்கைக்கு ஏன் IAQ விழிப்புணர்வு அவசியமாகிறது?

இலங்கையில் IAQவூடாக காற்றைத் தூய்மைப்படுத்த பலவழிகள் உள்ளது; வலுச்சக்தி பாதுகாப்பு, நகர்புறத்தில் சிறுவீட்டுத்தோட்ட முன்னெடுப்பு, நிலக்கரி ஆலைகளைத் தவிர்த்து இயற்கை வாயுவின் மூலம் எரிசக்தி உற்பத்தியாக்கும் ஆலைகளை நிறுவுதல், உள்நாட்டு இயற்கைத் தயாரிப்புகளை பாவனைக்கு கொண்டுவருதல், ஆரோக்கியமானதும் நிலையானதுமான நகரமயமாக்கலைத் திட்டமிடும் போது வளி மாசடைதலையும், காலநிலை மாற்றத்தையும் பிரதானமாக கவனத்திற்கொள்ளுதல்.

உதாரணமாக வியட்நாம் போன்ற நம் நட்புநாடுகள் காற்றோட்டத்தின் கட்டாய விதிமுறைகளாகக் கட்டிட நிர்மாணத்தின் போது உயரம், மாடிகளின் எண்ணிக்கை மற்றும் வதிவிடவாசிகளின் எண்ணிக்கை என்பவற்றை வரையறுத்துள்ளது.

இலங்கையின் அதியுன்னத வாழ்க்கைத்தரத்தை அனுபவிக்க வேண்டுமாயின் அது நாம் காற்றை IAQவின் விதிமுறைகளுக்கு அமைவாகப் பேணும்போது மாத்திரமே சாத்தியம். ஆரோக்கியமான சுவாசமே சீரான வாழ்தலை உறுதிப்படுத்தும்.

Related Articles