Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

விமானப் பணிப்பெண்கள் கவனிப்பவையும், நாம் கவனிக்க தவறியவையும்

முதல் தடவையாகவிருந்தாலும் சரி, பலதடவை விமானத்தில் பயணம் செய்தவர்களாகவிருந்தாலும் சரி விமானத்தினுள்ளே செல்லும்போதும், வெளியேறும்போதும் நம்மை வரவேற்கும் அல்லது வழியனுப்பும் விமானப் பணிப்பெண்களை ரசிப்பதுடன் நாம் அவர்களை கடந்து சென்று விடுகிறோம். ஆனால், அவர்களை நாம் கடக்கும் மிக சில நொடிகளுக்குள் அவர்கள் எத்தகைய பெரிய வேலையினை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பதனை கவனித்ததுமில்லை அறிந்திருப்பதுமில்லை.

உதாரணமாக, பணிப்பெண்கள் முதலில் பயணியொருவரை வரவேற்கும்போது, யாரெல்லாம் அவர்களது கண்களை பார்த்து தமது பதிலை அல்லது பிரதிபலிப்பை வழங்குகிறார்கள் என்பதனையும், யார் எல்லாம் கண்களை பார்ப்பதை தவிர்க்கிறார்கள் என்பதனையும் குறித்துக்கொள்ளுகிறார்கள். படம் – pbs.twimg.com

சாதாரணமாக விமானத்தில் பயணிக்கும் பயணியொருவர் விமானத்தினுள் பிரவேசிக்கும் முன்பு, முதலில் எதிர்கொள்ளவேண்டியவர்களாக இருப்பவர்கள் இந்த விமானப் பணிப்பெண்கள் ஆவார்கள். விமானத்தில் பணிப்பெண்களுக்கு பல்வேறு வேலைகள் ஒதுக்கப்பட்டிருப்பதுபோல, விமான பயணத்தின் ஆரம்பத்திலேயே பயணத்தில் பயணிகள் வழியாக ஏற்படக்கூடிய தாமதம், பிரச்சனைகள் , சிக்கல்கள் மற்றும் ஆபத்துக்களை கண்டறியவும் அதனை குறைத்துக்கொள்ளுவதன் மூலம் விமான பயணத்தை காலதாமதமின்றி தொடரவும் பயிற்சி வழங்கப்பட்டே இருக்கிறது. இதனைத்தான் ஒவ்வொரு விமானப்பணிப்பெண்னும் நாம் அவர்களை கடந்து செல்லும் செக்கன்களில் முகத்தில் புன்சிரிப்புடன் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அப்படியாயின், நாம் அவர்களை கடந்து செல்லும்போது எத்தகைய விடயங்களை எல்லாம் கவனித்து கொள்கிறார்கள்? அதன் வழியாக பிரயாணிகளுக்கு எத்தகைய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள்? எப்படி ஆபத்தையோ, சிக்கல்களையோ ஆரம்பத்திலேயே தவிர்க்கிறார்கள்?

முதல் தொடர்பு

விமானப் பயணத்தின் ஆரம்பத்திலேயே நீங்கள் விமானப் பணிப்பெண்களால் கவனிக்கப்படுகிறீர்கள் என்பதற்கு முதன்மையான சான்றே இதுதான். விமானத்தில் உள்நுழையும் ஒவ்வொரு பயணியும், வரவேற்க்ப்டும்வரவேற்கும் பணிப்பெண்ணுடன் எப்படி தமது தொடர்பை கண்கள் வழியாக (Eye Contact) ஏற்படுத்திக்கொள்ளுகிறார்கள் என்பதிலிருந்து இது ஆரம்பிக்கிறது எனலாம்.

உதாரணமாக, பணிப்பெண்கள் முதலில் பயணியொருவரை  வரவேற்கும்போது, யாரெல்லாம் அவர்களது கண்களை பார்த்து தமது பதிலை அல்லது பிரதிபலிப்பை வழங்குகிறார்கள் என்பதனையும், யார் எல்லாம் கண்களை பார்ப்பதை தவிர்க்கிறார்கள் என்பதனையும் குறித்துக்கொள்ளுகிறார்கள். பெரும்பாலும் கண்களை பார்க்காமல் கடந்து செல்லும் பயணிகள்மேல்தான் அடுத்த கவனிப்புப் படலம் இருக்கும்.

பணிப்பெண்கள் முதலில் பயணியொருவரை வரவேற்கும்போது, யாரெல்லாம் அவர்களது கண்களை பார்த்து தமது பதிலை அல்லது பிரதிபலிப்பை வழங்குகிறார்கள் என்பதனையும், யார் எல்லாம் கண்களை பார்ப்பதை தவிர்க்கிறார்கள் என்பதனையும் குறித்துக்கொள்ளுகிறார்கள். படம் – kajgana.com

அவர்கள் விமான பயணம் தொடர்பில் அச்சநிலையை கொண்டுள்ளார்களா? அவர்கள் நலமாக இருக்கிறார்களா? போதையில் இருப்பதை மறைக்கிறார்களா? தனிப்பட்ட பிரச்சனைகளை கொண்டுள்ளார்களா? விமானப்பயணத்தில் பிரச்சனைக்குரியவர்களாக மாறக்கூடியவர்களா? என இத்தகைய பயணிகளுக்கு எல்லாக் கோணங்களிலும் அடுத்தகட்ட கவனிப்பு இருக்கும். இதன் மூலமாக, விமானப்பணிப்பெண்கள் விமானத்திலுள்ள ஒவ்வொரு விமானப்பயணியினதும் பயணத்தின் உத்தரவாதத்தன்மையை உறுதி செய்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

போதையில் இருப்பவர்களா?

சர்வதேசரீதியில் பல்வேறு விமானசேவைகளும் தமக்கேற்றவகையில் வேறுபட்ட விதிமுறைகளை தன்னகத்தே கொண்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான விமான நிறுவனங்களால் பின்பற்றப்படும் விதிமுறைகளிலொன்று போதையிலுள்ளவர்களை விமான பயணத்தில் அனுமதிப்பதில்லை என்பதே ஆகும். மது அல்லது வேறேனும் போதைப்பொருள் பாவனைக்குள்ளானவர்கள் விமானத்தில் நுழையும்போது, அவர்களினால் விமானத்தின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு நுழைவாயிலிலேயே முடிவுகளை எடுக்குமளவுக்கு விமானப்பணிப்பெண்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன்விளைவாக, விமானம் பயணத்தை ஆரம்பித்தபின்பு ஏற்படக்கூடிய விளைவுகளை குறைத்துக்கொள்ளவே விமான நிறுவனங்கள் விரும்புகிறன.

உடற்தகுதி அதிகம் கொண்டவரா?

விமானத்தில் அனைவரும் உள்வாங்கப்பட்டு விமானம் பறக்க ஆரம்பித்த பின்பு, விமானத்திலுள்ள எவரேனும் நோய்வாய்ப்படின், அவர்களது மருத்துவ நலனுக்காக ஒட்டுமொத்த பயணிகளது நேரத்தையும் வீணாக்கவேண்டி வருவதுடன், மேலதிக விமானசெலவுகளையும் ஏற்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். படம் – india.com

விமானப்பணிப்பெண்களுக்கு எவ்வாறு தற்காப்பு செயல்பாடுகள் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதோ, அதுபோல உதவி தேவைப்படும் நேரத்தில் தகுதியான நபரை கண்டறிந்து உதவிகளை கோரக்கூடியவையில் பயணிகளை கண்டறியும் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பயணியொருவர் விமானத்தில் உள்நுழையும்போது, பூரண உடற்தகுதியுடன் இருக்கிறாரா? இவரினால் தற்காப்பு நிலையில் உதவியை வழங்க முடியுமா? என்பனவற்றை அனுமானம் மூலமாக விமானப் பணிப்பெண்கள் உறுதி செய்துக்கொள்கிறார்கள்.

பயணி பயணிக்க தகுதியானவரா?

பயணிகளை விமானப்பணிப்பெண்கள் வரவேற்கும்போது கண்காணிக்கும் மற்றுமொரு பிரதான விடயமாக இது உள்ளது. குறிப்பாக, ஒருவர் பூரண உடற்தகுதியுடன் பயணத்தை ஆரம்பிக்கிறாரா? எந்தவிதமான நோய்த்தாக்கநிலைக்கும் உள்ளாகாதவரா? என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். காரணம், விமானத்தில் அனைவரும் உள்வாங்கப்பட்டு விமானம் பறக்க ஆரம்பித்த பின்பு, விமானத்திலுள்ள எவரேனும் நோய்வாய்ப்படின், அவர்களது மருத்துவ நலனுக்காக ஒட்டுமொத்த பயணிகளது நேரத்தையும் வீணாக்கவேண்டி வருவதுடன், மேலதிக விமானசெலவுகளையும் ஏற்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். எனவே, இவற்றறை எல்லாம் தவிர்த்துக்கொள்ள பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் பயணிப்பதற்கான தகுதி கொண்டவர்களா என்பது கண்காணிக்கப்படுகிறது.

கர்ப்பிணி பயணிகள் மற்றும் வலது குறைந்தோர்

விமானப்பணிப்பெண்களால் மிக அவதானமாக கண்காணிக்கப்படும் வகையினர் இவர்கள் ஆவர். விமான பயணத்தில் கர்ப்பிணியொருவரின் பயணம் அவரது வைத்தியரின் சிபாரிசுடன் மாத்திரமல்ல, விமான விதிகளுக்கும் உட்பட்டே அனுமதிக்கப்படுகிறது. எனவே, கர்ப்பிணித் தாயொருவர் பயணத்தை ஆரம்பிக்க முன்னமே, இவற்றறை எல்லாம் மீள்பரிசோதனை செய்துக்கொள்ளவேண்டிய கடப்பாடு அடுத்துவரும் சில மணிநேரங்களுக்கு அவர்களுடனேயே பயணிக்கவுள்ள விமானப்பணிப்பெண்களுக்கு உள்ளது.

அதுபோலவே, வலது குறைந்தோர் விமானத்தில் உள்நுழையும்போது, அவர்களது பாதிப்பு எத்தகையது? அவர்களுக்கு மேலதிகமாக செய்யக்கூடிய உதவிகள் என்ன? அவசரநிலைமைகளின்போது, அவர்களால் செயல்படக்கூடிய பிரத்தியேக இருக்கைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதா? என அனைத்துமே உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டிய கடப்பாடு விமானப்பணிப்பெண்களுக்கு இருக்கிறது.

தடுமாறும் பயணிகளா?

விமானப் பயணம் என்பது, சாதரணமாக தரைமார்க்கமாக நாம் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனங்களினூடான பயணமாக இருக்கப்போவதில்லை. எனவே, விமானத்தில் புதிதாக அல்லது பலதடவை பயணித்த அனைவருக்குமே, தமது பயணம் தொடர்பிலும், விமானத்தின் அசைவுகள் தொடர்பிலும் ஒருவகையான பயமோ அல்லது தடுமாற்றமோ இருக்கவே செய்யும். எனவே, அதனை அவதானிக்கவேண்டிய பொறுப்பும், பயணத்தின்போது பயணிகளை சகஜநிலைக்கு கொண்டுவரவேண்டிய கடமையும் விமானப்பணிப்பெண்களுக்கு இருக்கிறது. எனவே, இத்தகைய பயணிகளை பயண ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டுகொள்ளுவது அவசியமாகிறது.

விமானத்தில் புதிதாக அல்லது பலதடவை பயணித்த அனைவருக்குமே, தமது பயணம் தொடர்பிலும், விமானத்தின் அசைவுகள் தொடர்பிலும் ஒருவகையான பயமோ அல்லது தடுமாற்றமோ இருக்கவே செய்யும். எனவே, அதனை அவதானிக்கவேண்டிய பொறுப்பும், பயணத்தின்போது பயணிகளை சகஜநிலைக்கு கொண்டுவரவேண்டிய கடமையும் விமானப்பணிப்பெண்களுக்கு இருக்கிறது. படம் – wp.com

விமானப்பணிப்பெண் ஒருவருக்கு பயணியொருவர் தன்னை கடந்துசெல்லும் 4-5 வினாடிகளில் நாம் மேலே பார்த்த முக்கியமான விடயங்களை அவதானித்து அதற்கேற்றால்போல தனது முடிவுகளை எடுக்கவேண்டிய கடினமான சூழ்நிலையை கையாளவேண்டியிருப்பதுடன், இதற்கு மத்தியில் விமானத்தில் நுழையும் ஒவ்வொரு பயணிக்கும் தமது புன்முறுவல் மாறாத இன்முகத்தினை காட்டவேண்டியதாகவும் இருக்கும். இதற்க்கு எல்லாமே, அவர்கள் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் அல்லது பயிற்றுவிக்கப்பட்டுத்தானே இருப்பார்கள் என சொன்னாலும், இனிவரும் காலத்தில் உங்களுக்கு அவர்களை கடந்துசெல்ல ஒரு வாய்ப்பு அமையும்போது, அவர்களது இந்த கடினமான தொழில்முறையை நினைவுபடுத்திக்கொள்ளவோ அல்லது அவர்களுடன் நல்லமுறையில் வந்தனம் வைக்கவோ உதவியாக இருக்கும்.

Related Articles