Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

மின்யுத்தம் -வென்றது யார்?

அத்தியாயம் 3:

எடிசனால் ஏமாற்றப்பட்டு அவரை விட்டு விலகிய டெஸ்லா, தானே சுயமாக ஒரு மின்விளக்கு அமைப்பை ஆரம்பித்தார். ஆனால் அந்த நிறுவனம் வெகு விரைவாகவே மூடு விழா கண்டது. டெஸ்லா வேறு வழியில்லாமல் பள்ளம் தோன்றும் பணிக்கு சென்றார். இருந்த போதும் கூட அவ்வேளையில் டெஸ்லாத்திலிருந்து வெப்ப காந்த மோட்டரை செம்மைப்படுத்திக் கொண்டிருந்தார். அதற்கான உரிமத்தையும் பெற முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரது கண்டுபிடிப்புகளை கண்டு வியந்த முதலீட்டாளர்களான Charles F. Peck மற்றும் Alfred S. Brown இணைந்து டெஸ்லாவுக்காக 1886 ஆம் ஆண்டு மேன்ஹேடன் பகுதியில் ஒரு ஆய்வுக் கூடத்தை வாடகைக்கு எடுத்தனர். 

வெப்பக்காந்த மோட்டரை செம்மைப்படுத்துவதில் டெஸ்லா தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். ஆனால் அம்மோட்டர் ஒரு விழலுக்கு இறைத்த நீர் என்று நிரூபணமானது. மனம் உடைந்து போன டெஸ்லாவை பெக் ஆறுதல் கூறி ஆடலோட்ட மோட்டாரில் கவனம் செலுத்துமாறு ஊக்கப்படுத்தினார். தனது மோட்டாரை பல்வேறு விதமான ஆடலோட்ட மின்னோட்டங்களை பரிசோதித்தார் டெஸ்லா. ஆனால் அதே வேளை வெஸ்டிங்ஹவுஸின் பொறியியலாளர்கள் ஒரே ஒரு ஆடலோட்ட மின்னோட்டத்தை வைத்தே தமது பரிசோதனைகளை மேற்கொண்டனர். 1887 ஆம் ஆண்டு டெஸ்லா சூழலும் காந்தப்புலத்தை கண்டுபிடித்தார். இரண்டு வெவ்வேறு ஆடலோட்ட மின்னோட்டங்களை மோட்டாரின் நிலையச்சுக்கு குறுக்காக எதிரெதிரே வழங்குவதன் மூலம் இதனை தோற்றுவிக்க முடியும் என்பதனை அவர் கண்டுபிடித்தார். நவீன பொறியியலாளர்கள் டெஸ்லாவின் மோட்டார் ஆனது ஈர் அவத்தை மின்சாரத்தில் இயங்கியது என்று கூறுவார்கள். தொடர்ந்து முயன்று டெஸ்லா சூழலும் காந்தப்புலத்தை வெற்றிகரமாக உருவாக்கினார் தொடர்ந்து அதற்கான ஆடலோட்ட மின்னோட்ட மோட்டார்களுக்கான உரிமத்தையும் பல்அவத்தை (multiphase) ஆடலோட்ட மின்னோட்ட உரிமத்தையும் அவர் பெற்றுக் கொண்டார். பல்அவத்தை ஆடலோட்ட மின்னோட்டம் என்பது பாரிய தூரங்களுக்கு மின்சாரத்தை கடத்தக்கூடியதாகும். 

டெஸ்லாவின் மோட்டரானது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட பின்னர், அதுவரை நிதி உதவியை வழங்கிய பெக்கும் பிரவுனும் அதன் மூலம் லாபம் பார்க்க எத்தனித்தனர். டெஸ்லாவின் மோட்டருக்கான உரிமத்தை விற்பனை செய்வதே அவர்களது நோக்கமாக இருந்தது அந்த வகையில் 1888 ஆம் ஆண்டு American institute of electrical engineers வளாகத்தில் டெஸ்லா ஒரு விரிவுரை வழங்க ஏற்பாடு செய்தனர் அவர்களது திட்டம் பலித்தது விரிவுரைக்குப் பின்னர் ஜார்ஜ் வெஸ்டிங் ஹவுஸ் அவர்கள் டெஸ்லாவின் உரிமத்தை 200 000 டாலர்களுக்கு வாங்கினார். அதன் இன்றைய மதிப்பு ஐந்து மில்லியன் டாலர்கள் ஆகும். 

போர் துவங்கியது

புதிதாகப் பெறப்பட்ட ஆடலோட்ட மின்னோட்ட அமைப்புடன் வெஸ்டிங் ஹவுஸ் தனது முதல் போட்டியாளரான எடிசன் எலக்ட்ரிக் லைட் கம்பெனிக்கு எதிராக களத்தில் இறங்கினார்.  எங்கெல்லாம் எடிசனின் நேரோட்ட மின்னோட்டம் வேலை செய்ய முடியாதோ அவ்வாறான மக்கள் பெரிய நிலப்பரப்பில் பரந்து வாழும் நகரங்களுக்கு சென்று ஒப்பந்தங்களை பெற முயன்றார். இந்த இலாபத்தின் மூலம் புகையிரத பாதைகளின் வளிநிறுத்திகளையும் சமிக்ஞை அமைப்புகளையும் அவர் உற்பத்தி செய்தார். எடிசனை விட குறைந்த பெறுமதிக்கு வெஸ்டிங் ஹவுஸ் ஏலங்களை எடுத்தார். குறைந்த செலவில் மின் நிலையங்களை அமைத்து கொடுக்கவும் அவர் உடன்பட்டார். 

வெஸ்டிங் ஹவுஸ் இன் தந்திரங்கள் எடிசனை வெகுவாக பாதித்தன. எடிசனை பொருத்தவரை மிக எளிமையான வணிக உத்திகளையே கொண்டிருந்தார் தான் வழங்கும் சேவைக்கான செலவு போக அதற்கு மேலாக ஒரு நல்ல லாபத்துடன் பணியாற்றுவதே அவரது நோக்கமாக இருந்தது. ஆனால் இந்த போட்டியில் தனது எதிராளியை முந்துவதற்காக பணத்தை இழப்பது அவருக்கு சரியாக படவில்லை. 1888 ஆம் ஆண்டு டென்வர் மற்றும் மினியாபொலிஸ் ஆகிய நகரங்களுக்கு ஒளியூட்டும் பாரிய ஒப்பந்தங்களை இழந்த பின்னர் எடிசனின் முகாமையாளர்களின் ஒருவர் ஒருவரான பிரான்சிஸ் ஹேஸ்டிங்ஸ், வெஸ்டிங் ஹவுஸின் ஆடலோட்ட மின்னோட்ட அமைப்பின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தி தன் பக்க தாக்குதலை ஆரம்பித்தார்.  

முதல் ஆடலுடன் மின் தொகுதிகள் பிற்பாடு தவிர்க்க முடியாத பல விபத்துக்கள் நிகழ்ந்தன. வயர்களுடன் பணியாற்றியவர்கள் சிலர் உயர் அழுத்த மின்சாரத்தால் தாக்கப்பட்டனர். இது ஹேஸ்டிங்ஸ் மற்றும் எடிசன் கம்பெனிக்கு சாதகமாக அமைந்தது. செய்தித்தாள்கள் இதனை பூதாகரமாக்கின. இவ்வேளையில் ஹேஸ்டிங்ஸ் தனக்கு ஒரு சகாவை கண்டு கொண்டார். Harold P. Brown என அழைக்கப்படும் இவர் ஒரு பொறியியல் ஆலோசகர். வெஸ்டிங் ஹௌஸ் எலெக்ட்ரிக் இற்கும் இவருக்கும் இடையில் இருந்த முற்பகை ஹேஸ்டிங்ஸ் இற்கு சாதமாக அமைந்தது. பழிதீர்க்க காத்திருந்த பிறௌன் எடிசனின் முகாமையாளர்கள்  வழங்கிய ஆதரவுடன் தெரு நாய்களை ஆடலோட்ட மின் உபகரணம் கொண்டு தாக்கி ஆடலோட்ட மின்சாரத்தின் வீரியத்தை செய்தியாளர்களுக்கு செய்முறை மூலம் காட்டினர். 

இதற்கு அடுத்த கட்டமாக பிரௌன் வைத்த நகர்வே அனைவரையும் பதறடித்தது. உயர் தண்டைனையான மரண தண்டனைக்கு ஆடலோட்ட மின்சாரத்தை பிரயோகிப்பதே அது. நியூயார்க்கில் அப்போது தூக்கு தண்டனை மிகக்கொடூரமான தண்டனையாக கருதப்பட்டது. இவ்வேளையில் அவர்கள் மரணதண்டனைக்கு மாற்றுவழி ஒன்றை தேடிய வண்ணம் இருந்தனர். மின்சாரம் தூக்குதண்டனையை விட வலி குறைந்தது என பிரௌன் வாதிட்டு அவர்களை தன்வழிப்படுத்தினார். ஒரு ஆடலோட்ட மின் பிறப்பாக்கியையும் கொள்வனவு செய்திருந்தார். ஆபர்ன் சிறைச்சாலையில் நிறுவப்பட்ட இவ்வியந்திரம், வில்லியம் கெம்லர் எனும் கொலைக்குற்றவாளிக்கு 1890 ஆம் ஆண்டு மரணதண்டனை நிறைவேற்ற பயன்படுத்தப்பட்டது. மறுநாள் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளில் ‘வெஸ்டிங்ஹௌஸ்’ இன் பெயர் வருமாறு பிரௌன் மற்றும் எடிசன் கம்பனி கூட்டணி பார்த்துக் கொண்டது.  Kemmler had been Westinghoused என்பதே பெரும்பாலான தாள்களில் தலைப்புச் செய்தி. 

வில்லியம் கெம்ளரின் மரண தண்டனை குறித்து வெளியான நாளிதழ் செய்தி
மூலம்: facebook.com/TodayInHorrorHistory

இவையெல்லாம் போதாதென்று பிரௌன் வெஸ்டிங்ஹௌஸை நேருக்கு நேர் மோத அறைகூவல் விடுத்தார். தன் உடலில் தான் நேரோட்ட மின்னை செலுத்திக் கொள்வதாகவும் அதேவேளை வெஸ்டிங்ஹௌஸ் தன் உடலில் ஆடலோட்ட மின்னை செலுத்த வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்தார். தன் சகாவுக்கு ஏதும் ஆகிவிட கூடாதென்று டெஸ்லா தன்னையே பணயம் வைத்தார். 1891 ஆம் ஆண்டு ஒரு விரிவுரையின் போது டெஸ்லா தன் உடலினுள் 250 000 வோல்ற்று (அன்றாட வீட்டுப்பாவனை மின்சாரம் 240 வோல்ற்று) மின்சாரத்தை செலுத்தினார். அதியுயர் மீடிறன் காரணமாக டெஸ்லா சுருள் எனும் அவ்வுபகரணத்திலிருந்து வந்த மின் கீற்றுகள் டெஸ்லாவின் உடலை சுற்றி பயணித்தன. அவரது உள்ளுறுப்புகளையோ அவரையோ எவ்விதத்திலும் தாக்கவில்லை. 

மக்களுக்கு வித்தை காட்டி போராடிக்களைத்த  எடிசன் அணி அடுத்த கட்டமாக வெவ்வேறு சட்டமன்றங்களை நாடியது. அதிகபட்சம் 300 வோல்ற்று மின்சாரம் வழங்கும் தொகுதிகளே நிறுவப்பட வேண்டும் என போராடினர். ஒஹையோ மற்றும் வேர்ஜீனியா பகுதிகளில் கிட்டத்தட்ட இது சட்டமாக அமுலாகும் நிலையும் உருவானது. ஆனால் நடக்கவில்லை. 

ஆடலோட்டத்தின் ஆட்சி 

ஒருபுறம் எடிசன் மற்றும் குழு மக்கள் மனதை திசை திருப்புவதில் மும்முரமாக இருக்க மறுபுறம் வெஸ்டிங்ஹௌஸ் மற்றும் டெஸ்லா கூட்டணி பொறியியல் மற்றும் வணிகத்தில் கோலோச்ச ஆரம்பித்து விட்டனர். வெஸ்டிங்ஹௌஸ் கம்பனி சிகாகோவில் நடைபெற்ற கண்காட்சியில் தமது ஆடலோட்ட மின்சாரத்தின் தகவை ஆயிரக்கணக்கான மின்விளக்குகளை ஒளியூட்டுவதன் மூலம் காண்பிக்க எண்ணினர். 1893 World’s Columbian Exposition எனும் பெயரில் இடம்பெற்ற இக்கண்காட்சிக்கு மின்சக்தி வழக்கம்போவது ஆடலோட்டமா நேரோட்டமா என்ற போட்டியே கடுமையாக நிலவியது. இறுதியில் ஆடலோட்டம் வென்றதோடில்லாமல் ஆயிரக்கணக்கான மின்விளக்குகளை ஒரே கணத்தில் ஒளியூட்டி வந்தோரை மெய்சிலிர்க்க வைத்தது. இராப்பொழுதில் ஒளி வெள்ளம் அங்கிருந்தோரை வியப்பில் மூழ்கடித்தது மாத்திரமின்றி எதிர்காலம் ஆடலோட்டத்தின் வசம் என்பதை அத்தனை பேர் மத்தியிலும் பறை சாற்றியது. 

1893ல் இடம்பெற்ற கண்காட்சி தொடர்பாக வெளியான ஓவியம்
மூலம்: loc.gov

இது இவ்வாறு இருக்க பின்னணியில் டெஸ்லா வேறு வேலையில் மும்முரமாக இருந்தார். நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒரு நீர் மின்பிறப்பாக்கியை நிறுவும் நோக்கில் வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களை சம்மதிக்க வைக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். நியூயோர்க் பிரதேசம் முழுவதும் ஆடலோட்டத்தை விநியோகிக்கும் இத்திட்டத்தினை அவர்களுக்கு தெளிவு படுத்திய வண்ணம் இருந்தார். நயாகரா நீர்வீழ்ச்சியின் சக்தியை பிரயோகித்து பாரிய நிலப்பரப்பிற்கு மின்சாரம் வழங்கும் இம்முயற்சிக்கு கைகொடுக்குமாறு வங்கிகளை வற்புறுத்தினார் டெஸ்லா. இதேவேளை நடைமுறை நிலவரம் குறித்து வெஸ்டிங்ஹௌஸிற்கு அவ்வப்போது அறிவித்த வண்ணமும் இருந்தார். மின்நிலையத்தினை வடிவமைக்கும் ஏலத்தில் பங்கெடுக்க இது உதவியாக இருந்தது. இதற்கு மரியாதை செலுத்தும் விதமாக 1896 ஆம் ஆண்டு நயாகரா மின் நிலைய திறப்புவிழா கொண்டாட்டத்தில் உரையாற்றும்படி டெஸ்லாவை முதலீட்டாளர்கள் கேட்டுக்கொண்டனர். 

யுத்தம் முடிந்தது!

இந்த யுத்தத்தை அடிப்படையாக கொண்டு சில திரைப்படங்களும் வெளிவந்தன. 

2019 ஆம் ஆண்டு வெளியான தி கரன்ட் வார் 

தி கரன்ட் வார் திரைப்படத்தின் விளம்பரப்படம்
மூலம்: IMDB

பெனடிக்ட் கம்பர் பேட்ச், டொம் ஹொலண்ட் மற்றும் நிகோலஸ் ஹோல்ட் ஆகியோர் நடித்த இத்திரைப்படம் அல்ஃபோன்ஸோ கோமஸ் என்பவரால் இயக்கப்பட்டது. எடிசனை ஒரு இறுக்கமான நபராக காண்பித்திருப்பர். முழுமையான கறுப்புச் சாயத்தை எடிசன் மீது பூசாமல் மெழுகியிருப்பார்கள் இத்திரைப்படத்தில். கண்காட்சியில் யார் வெற்றி பெறுகிறார்கள் அதற்காக நடக்கும் போட்டிகளும் சதிகளுமே இத்திரைப்படத்தின் கதையும் திரைக்கதையுமாக நிறைந்திருக்கும். 

2006 ஆம் ஆண்டு வெளியான தி பிரெஸ்டீஜ் 

தி ப்ரெஸ்டீஜ் திரைப்படத்தின் விளம்பரப்படம்
மூலம்: moviesanywhere.com

இரு மந்திரவாதிகளுக்கிடையிலான போட்டி அதில் யார் வெல்கிறார்கள் என்பது கதை. கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கிறிஸ்டியன் மேல், ஹியூ ஜாக்மன், மைக்கேல் கேன், ஸ்கார்லட் ஜொன்சன் மற்றும் ரெபேக்கா ஹோல் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த இத்திரைப்படம் நோலன் ரசிகர்களுக்கு ஒரு செல்லப்பிள்ளை. டெஸ்லா – எடிசன் மோதல் நிகழும் சமகாலத்தில் இக்கதை நிகழ்வதாக திரைக்கதையை பிண்ணியிருப்பார் நோலன். டெஸ்லா ஒரு கதை மாந்தராக வரும் காட்சிகளும் நன்றாக இருக்கும். 

Related Articles