நெருக்கடிகளின் போது பெண்களை வலுப்படுத்துதல் | பாகம் 1: பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு

பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சிநிரல் தொடர்பில் அறிந்துள்ளீர்களா?

இந்த வருடம் இலங்கை, பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தனது முதலாவது தேசிய செயற்திட்டத்தை ஏற்றுக்கொண்டது. இந்த கொள்கைக் கட்டமைப்பானது, மோதல்கள் மற்றும் நெருக்கடிகளால் நேரடியாக பாதிக்கப்படும் மற்றும் தொடர்ந்து பாதிக்கப்படும் பெண்களுக்கு இலக்கு ஆதரவை வழங்கும் அதே சமயம் சமாதானத்தை கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்கை வலுப்படுத்துகிறது.

நாட்டிலுள்ள பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளுக்கான அதன் சாத்தியமான விளைவுகளை வெளிக்கொணர, நாங்கள் இலங்கை ஐ.நா பெண்கள் அமைப்பை சேர்ந்த ரமாயா சல்காடோ மற்றும் எஸ்தர் ஹூல் ஆகியோருடன் கலந்துரையாடினோம்.

இந்தத் தேசிய செயற்திட்டமானது ஐ.நா பெண்கள் அமைப்பு மற்றும் ஜப்பான் அரசாங்கத்தின்  உதவியோடு ‘பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல்’ அமைச்சினால் வடிவமைக்கப்பட்டது. 

Related Articles